கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற முத்தமிழ் விழா போட்டி நிகழ்வுகள் (VIDEO & PHOTOS)

(லியோன்)

கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற முத்தமிழ் விழா போட்டி நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால்  பிரதேச செயலக மட்டத்தில்  பாடசாலை மாணவர்களுக்கிடையில்  முத்தமிழ் விழாவினை முன்னிட்டு கிராமியப் பாடல் போட்டிகள்  நடத்தப்பட்டு வருகின்றன

இதன் கீழ் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் முத்தமிழ் விழாவினை முன்னிட்டு கிராமிய பாடல் போட்டிகள் மண்முனை வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி . தர்ப்பணா ஜெயமாறனின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்த போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை ,மட்டக்களப்பு இந்து கல்லூரி, மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரி ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள்  கலந்துகொண்டன .

இடம்பெற்ற போட்டிகளில் நடுவர்களின் தரப்படுத்தலுக்கு அமைவாக முதலாம் இடத்தினை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையும் , இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியும் , மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு இந்து ம]கல்லூரியும் பெற்றுக்கொண்டன .


இந்த போட்டி நிகழ்வுக்கு   நடுவர்களாக  மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியை திருமதி .எம் . மகேந்திரன் ,மட்டக்களப்பு கிரான்குளம் விபுலானந்தர் வித்தியாலய சங்கீத ஆசிரியர்  திருமதி . எஸ் . அற்புதநாதன், வவுணதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் .செல்வி . வை . தனுஷியா ஆகியோர் கலந்துகொண்டனர்.