கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியில் சிவானந்தா இரண்டாம் இடம்

 
10ஃ11-07-2016 கல்முனை சாந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்கான காற்பந்தாட்டப் போட்டியில் மட்/ சிவாநந்தா தேசிய பாடசாலை அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.


இவ் அணியானது 2ம் சுற்றில் அக்கரைப்பற்று அல்-சிராஜ் ம.வித். அணியை 5-0 என்ற அடிப்படையலும், காலிறுதியில் கல்முனை அல்-மனார் மத்திய கல்லூரி அணியை 1-0 என்ற அடிப்படையிலும் அரையிறுதியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணியை 1-0 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி (தே.பா) அணியை எதிர் கொண்டது. நேற்று மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இரண்டு பகுதியிலும் முழு நேரமும் எந்தவொரு அணியும் கோல் பதிவுசெய்யவில்லை (0-0) எனவே போட்டியின் முடிவு தண்ட உதைக்கு (Pநயெடவல) பெனால்ரி முறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும் 4-3 என்ற அடிப்படையில் புனித சூசையப்பர் கல்லூரி வெற்றி பெற்று சம்பியனானது. மட்ஃ சிவாநந்தா தேசிய பாடசாலை அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. மேலும் இந்தவகையில் கடந்த 9 ஆண்டுகளிற்குப் பின் சிவாநந்தா தேசிய பாடசாலை மாகாண மட்ட காற்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இக் காற்பந்தாட்டப் போட்டிகளில் மட்டக்களப்பு வலயம் சார்பாகப் பங்குபற்றிய பாடசாலைகளில் மட்ஃ சிவாநந்தா தேசிய பாடசாலை மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய மட்ஃ சிவாநந்தா தேசிய பாடசாலையின் காற்;பந்தாட்டப் பொறுப்பாசிரியர் திரு. மு.சதாசிவம், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு.ஆ.P.குகாதரன் உதவிப் பயிற்றுவிப்பாளர் செல்வன் மு.சுலக்~ன் ஆகியோருடன் இப் பெருமைக்குக் காரணமான அணி வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களிற்கு கிண்ணங்களும் சான்றிதழ்களும் பாடசாலை அதிபர் திரு. மு.மனோராஜ் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கி வைக்கப்பட்டன.