மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு ( VIDEO & PHOTOS).

(லியோன்)


மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் கடந்த 10ஆம்  திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு 13.07.2016 மாலை மங்களாராம விகாரையில்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரர் ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில் எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் முதலில் நான் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் .

அதேபோல் விசேட  விதமாக கடந்த காலங்களில்  நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக சரியான தகவல்களை  வழங்கிய ஊடக நிறுவனங்களுக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் .

இன்றைய தினம் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கான காரணம் கடந்த நாட்களில் மட்டக்களப்பு மங்களாராம விகாரையில்  இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே , அதாவது  கடந்த 10ஆம்  திகதி அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மட்டக்களபுக்கு விஜயம் செய்தார்.
ஜனதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது நடைபெறவுள்ள நிகழ்வுக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது .


அந்த நிகழ்வுக்கு நானும் சென்றிருந்தேன் . நிகழ்வில் கலந்துகொண்ட அந்த வேளையில் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு நான் விசேட  அழைப்பு விடுத்தேன் மட்டக்களப்பு விகாரைக்கு விஜயம் செய்துவிட்டு போகுமாறு , அந்தவேளையில் நான் விடுத்த அழைப்புக்கு   மறுப்பு தெரிவித்து தற்போதைக்கு   நேரம் இல்லை என தெரிவித்தார் .
நேரம் இல்லை என தெரிவித்த அவ்வேளையில் எனக்கு சிறிது கவலை ஏற்பட்டது .
எதற்குமில்லை மட்டக்களப்பு எமது மங்களாராம விகாரைஸ்தலம் 1985ஆம் ஆண்டு முழுவதும் தீவைத்து நாசமாக்கப்பட்ட விகாரையாகும் .
இந்த விகாரையை புனர்நிர்மாணம் செய்வதற்கு 2013ஆம் ஆண்டு ஆரம்பித்தேன் . 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து புனர்நிர்மாணம் செய்து 2015ஆம் ஆண்டு இந்த விகாரையை திறந்து வைப்பதற்கு முழுமையான வேலைகளை செய்து முடித்தேன் . 


2015ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 27ஆம் திகதி திறந்து வைத்து  புனித புத்த தளத்திற்கு பூஜை செய்வதற்கு    ஜனாதிபதிக்கு கௌரவ  அழைப்பு விடுக்கப்பட்டது . அப்போது விடுத்த அழைப்பை ஜனாதிபதி  ஏற்றுக்கொண்டார் .

அழைப்பை ஏற்றுக்கொண்டு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் புனித புத்த தளத்தின் பூஜைக்கு வருவதற்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது .

அதேபோன்று பூரணை தினமான அன்று புனித புத்த தளத்தின் பூஜை வழிபாடு சகல வேலைகளும் நிறைவுசெய்யப்பட்டிருந்த  வேளையில் கடைசி தருணத்தில்  ஜனாதிபதி மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்திருந்தார் .

அன்று மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு ஜனாதிபதி வருவதாக அரச அச்சகத்தால் அச்சிடப்பட்ட அறிவித்தல் பிரசுரமே நான் காட்டுவது , இது அரச அச்சகத்தால் அச்சிடப்பட்ட பிரசுரம் . இவை அனைத்து செய்யப்பட வேளையிலும் ஜனாதிபதி வரவில்லை .. பத்தாம் மாதம் 27ஆம் திகதி புனித புத்த தினமான நாளான அன்று  வருவதாக கூறியும்  ஜனாதிபதி வரவில்லை .இருந்தும் அன்று ஜனாதிபதியால் வரமுடியாது போனதிற்கு  நான் மாற்றுக்கருத்து தெரிவிக்க போவதில்லை . ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு அன்று வர முடியாமல் போயிருக்கலாம் . அதை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்வோம் . அதற்கு பிறகு ஜனாதிபதி மட்டக்களப்புக்கு நான்கு முறை வந்துள்ளார் .

நான்கு முறையும்   மட்டக்களப்புக்கு வந்து செயல்பட்ட அனைத்து விடயங்களையும்  விகாதிபதியான நாங்கள் ஒருபுறம் இருந்து கவனித்துக்கொண்டிருந்தோம் . அப்போதாவது ஒருமுறையேனும்  மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு வருவார் என்று , அப்படி இல்லை என்றால் ஏறாவூர் புனலதாவை விகாரைக்காவது செல்வார் என்று , அப்படி இல்லை என்றால் ஜயந்திபுர பௌத்த மத்திய நிலையத்திற்கு போவார் என்று , இவ்வாறு மட்டக்களப்பில் உள்ள எதோ ஒரு விகாரைக்கு போவார் என்று மிக உன்னிப்பாக பார்வையிட்டு வந்தோம் .ஆனால்  இவ்வாறு வருகை தந்த ஒரு தடைவையேனும் மட்டக்களப்பு விகாரைக்கோ அல்லது வேறு எந்த விகரைகளுக்கோ  அவர் சென்றிருக்க வில்லை . ஆனால் நாங்கள் கண்டிருக்கின்றோம் முஸ்லிம் பள்ளிகளுக்கு சென்றிருக்கிறார் , இந்து கோவில்களுக்கு சென்றிருக்கிறார் , ஆனபடியால் தான்  கடந்த பத்தாம் திகதி  நான் அழைப்பு விடுத்தேன் ஜனாதிபதிக்கு மங்களாராம விகாரைக்கும் வந்து விட்டு போகுமாறு , அப்போது  ஜனாதிபதி  மறுப்பு தெரிவித்த போது எனக்கு ஒரு விரக்தி ஏற்பட்டது .

அந்த விரக்தி வெறுப்பாக ஏற்பட்டது  எதற்காகவும் இல்லை . நான் இந்த அனைத்து ஊடகங்களுக்கு முன் பொறுப்புடன்  கூறுகின்றேன் .நாங்கள் சொல்லென்னா துன்ப துயரங்களை  அனுபவித்து . விடுதலை புலி இயக்கங்களின் அனைத்து தாக்குதலுக்கும் முகம் கொடுத்துகொண்டு  , சிங்கள பௌத்தர் என்று இல்லாமல் , முப்படைகளின் சக்தியை மட்டும்  வைத்துக்கொண்டு இவற்றை பாதுகாத்து முன்னுக்கு கொண்டு வந்தோம் ராணுவத்தின் இரத்த கரை படிந்த கைகளினால் . அப்படி துன்பங்களை அனுபவித்து தான் இந்த விகாரையை பாதுகாத்தோம் .

அந்த வகையில் யாராவது இதற்கு மறுப்பு தெரிவித்து ,விமர்சனங்களை தெரிவித்தால் அதனால் எமக்கு வெறுப்பு ஏற்படும் . அப்படி ஏற்பட்டதனால்  ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரங்களினால்  2015ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 27ஆம் திகதி இந்த  புனித புத்த தளத்தின் பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டார் என்கின்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டினை உடைத்த அகற்றுவதற்கு நான் செயல்பட்டேன் .

அகற்றுவதற்கு செயல்பட காரணம் எதற்காகவும் இல்லை . சமவுரிமை , சமாதானம், சகவாழ்வுக்கு செயல்படுகின்ற ஜனாதிபதியானால் , இந்த நாட்டின் சமாதனம் , சௌபாக்கியத்தோடு சமாதானத்தை ஏற்படுத்துகின்ற ஜனாதிபதியானால் அவருக்கு உரிமை உண்டு மற்றைய இனம்  போல  தன்னுடைய இனத்திற்கும் கெளரவம் கொடுத்து செயல்படுவதற்கு , அனைத்து சகல இனங்களுக்கும் சமாதானத்த ஏற்படுத்த செயல்படுத்தப்படும் முதல் அடித்தளங்கள் அமைத்து கொடுப்பது என்றால் பௌத்த சமய துறவிகள் போன்று  கிழக்கு மாகாணத்தில் .மட்டக்களப்பில்  வாழ்கின்ற  சிங்கள மக்களுக்கு என்று எதோ ஒரு வகையில் அவதானம் செலுத்துவது அவர்களுடைய பொறுப்பு  . அந்த பொறுப்பில் இருந்து விலகி செயல்படுவதனால் நான்  பௌத்த சமய துறவி என்கின்ற வகையில் அதை பார்த்துகொண்டு இருக்க முடியாதனால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாதனால் அந்த பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை உடைத்து அகற்றுவதற்கு செயல்படுகின்றேன் .

இப்போது இருப்பது அதுவல்ல பிரச்சினை இது  தொடர்பான  உண்மை தன்மை  எனக்கும் ஜனாதிபதிக்கும் மட்டும் தான் தெரியும் . இந்த விகாரைக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்தது  ஜனாதிபதிக்கு தெரியும் , வர முடியாததும் ஜனாதிபதிக்கும் தெரியும் , இப்போதைக்கும் வரமுடியாது போனதும் ஜனாதிபதிக்கு தெரியும் , ஆனால் இன்றைய நிலையில் நான் வெறுப்புடன்  தெரிவிக்க வேண்டியுள்ளது.

தேசிய ஊடகம் மிக மோசமான நிலையில் நடந்துகொள்கின்றது . தேசய ஊடகம் , இந்த இனத்திற்கு , இந்த நாட்டுக்கு , புனித பௌத்தத்திற்கு  இந்த தேசிய ஊடகம் செய்கின்ற பழிவாங்கலை உடன்  நிறுத்தவேண்டும் . ஏனென்றால் நான் சொல்வது நேற்றிரவு பார்த்தேன் சில அரசியல் வாதிகளுக்கு பின்னால் செல்கின்ற பெளத்த துறவிகள் ஒன்று சேர்த்துக்கொண்டு ஊடகங்களில் வெளியிடுகின்றனர் மட்டக்களப்பு மங்களாராம பௌத்த துறவி செயல்பட்ட செயல் கெளதம் பௌத்த சாசனத்தை அவமானப்படுத்தும் செயல் என்று, நான் அந்த பௌத்த துறவிகளுக்கு தெரிவிக்கின்றேன் மட்டக்களப்பில் விளிமியங்களை பாதுகாத்துக்கொண்டிருந்தால் மட்டக்களப்பில் மங்களாராம விகாரை இல்லாமல் போயிருக்கும் . இவ்வாறான பௌத்த துறவிகளின்  பெயர்கள் மட்டக்களப்பு  மங்களாராம விகாரையின் மண்ணைக்கூட மிதித்ததில்லை .

பெளத்த துறவிகளுக்கு காவி உடைகள் கொடுத்ததில்லை , இவர்களுக்கு தேவையான சுகபோக வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் , உல்லாச வாகனங்கள் , குருந்து வத்தை விகாரை போன்றவை பெற்றுக்கொண்டு  ராஜவாழ்க்கை வாழ்ந்துகொண்டு கொழும்பில் இருப்பதால் , நாங்கள் அப்படியான கொழும்பு வாழ்க்கை வாழ்ந்ததில்லை , நாங்கள் மட்டக்களப்பில் சொல்லென்ன துன்பங்களை அனுபவித்துக்கொண்டு , எங்களுடைய சிங்கள் இனம், எங்களுடைய பௌத்தம் , எங்களுடைய கலாசாரம் , மற்றைய இன மத ,கலாசாரம் என்பவற்றுடன்  இணைந்து ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து இந்த தாய் நாட்டின் எங்களுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாத்துக்கொண்டு நாங்கள் வாழ்கின்றோம் .

எனவே தயவுடன் இந்த நேரத்தில் வேண்டிக்கொள்வது   எனக்கு இவ்வாறான செயலை செய்வதற்கு எத்தனிக்கவேண்டாம் , இந்த செயலால் என்னுடைய கௌரவத்தை சீர்குலைக்க வேண்டாம் . அப்படியானால் நீங்கள் ஒப்புவித்திருக்க  வேண்டும் , தேடிபார்த்திருக்க வேண்டும் , அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து வெபர் மைதானத்தில் நடத்தப்படுகின்றது தேசிய நிகழ்வு , தேசிய விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்படுகின்றது , நல்லது நான் கேட்கின்றேன் கூச்சல் இடுகின்ற பெளத்த துறவிகளிடம் , கூச்சல் இடுகின்ற தேசிய வியாபாரம்  , கடமைக்காவது தேடிபார்த்திர்களா ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வந்த வேளையில் தேசிய கீதம் பாடவில்லை ,ஏன் இனவாத தூண்டப்படும் , இசையினை மட்டும் ஒலிக்கசெய்யப்பட்டது  , ஜனாதிபதியாகியும் மேடையில் அமர்ந்திருந்தார் , வடக்கு கிழக்கு முதலமைச்சர் காணி அதிகாரங்களை கேட்கின்றார் ,பொலிஸ் அதிகாரத்தை கேட்கின்றார் , ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை உங்களுக்கு காணி அதிகாரங்களை தரமுடியாது ,பொலிஸ் அதிகாரங்கள் தரமுடியாது இது ஒற்றை ஆட்சி இதை பிரிக்க முடியாது என  ஜனாதிபதி தெரிவிக்கவில்லை . இந்த செயலால் மட்டக்களப்பு மங்களாராம மண்ணை கூட மிதிக்காமல்  கடைசியில் மட்டக்களப்பு சிறைச்சாலை சென்று சிறைக்கைதிகளை தாலாட்டிவிட்டு செல்கின்ற ஜனாதிபதியாக இருப்பாரானால்  அவ்வாறான ஜனாதிபதி  பெயர் பொறிக்கப்பட்ட எந்தவொரு தடய பொருட்களையும் மட்டக்களப்பு மங்கலாராமையில் வைப்பதற்கு நான் ஆயத்தமாக இல்லை . அதனாலேயே  நான் உடைத்து அகற்றினேன் . 

இந்த பிரச்சினை தொடர்பாக உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள யாராக இருப்பினும் நான் கௌரவத்துடன் அழைக்கின்றேன் . வாருங்கள் மட்டக்களப்பு மங்களாராமைக்கு நாங்கள் விவாதிப்போம் . அன்று புலிகளின் கைதியாக உணவு உட்கொண்டு , புலிகளின் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டு , இனத்துக்காக  இந்த புனித தளத்தை பாதுகாத்தேன் முடக்கி போடுவதற்கல்ல , நாங்கள் நவீன வாகனங்களுடன் உல்லாச வாழ்க்கை வாழவில்லை , அனுபவிக்க வேண்டிய அனைத்து துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு  இந்த புனித தளத்தை பாதுகாத்தேன் . அன்று முதல் இன்று வரை அடிவாங்குகின்றேன் ,  இவ்வாறன்  பௌத்த துறவிகளுக்கு வழிநடத்துபவர்கள் செயல்படுகின்ற   செயல்பாட்டாலே பௌத்த துறவிகள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் .

வழிநடத்துபவர்களின் செயல்பாடுகள் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டிருக்க படமாட்டோம் . தயவாக நான் சொல்வது  தேசிய ரூபவாகினி .ஐ .டி . என்  தொலைகாட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட   பிரசாரத்தை , அந்த ஊடக செய்தியை தயவுசெய்து மீண்டும் சரி செய்யுங்கள் , அப்படி இல்லை என்றால் நாங்கள் பொறுப்புனர்வோடு இது தொடர்பாக தெளிவு படுத்த வேண்டிய நிலை ஏற்படும் . 

நாட்டின் தேசிய இனத்திற்கு முன்னால் உயிர் தியாகம் செய்து உண்மைத்தன்மையை வெளிபடுத்துவேன் என்பதை தெரிவித்து கொள்வதற்காகவே அனைத்து ஊடகங்களுக்கும்  அழைப்பு விடுத்தேன் . 

வருகை தந்த அனைத்து ஊடகங்களுக்கும்  நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் . என மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரர் தெரிவித்தார்.