சமுத்திரத்தை அண்டிய பகுதியில் வாழ்கின்ற மக்கள் அவர்களது சமுத்திர பகுதியை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார் (VIDEO & PHOTOS)

(லியோன்)

சமுத்திரத்தை அண்டிய பகுதியில் வாழ்கின்ற மக்கள் அவர்களது சமுத்திர பகுதியை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு டச்பார் கடற்கரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார் .

உலக சமுத்திர  தினத்தை முன்னிட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும்  சுற்றாடல் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக ஜூன் மாதம் 08ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சமுத்திரத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள்  இடம்பெற்று வருகின்றது . 

இதன் கீழ்  மட்டக்களப்பு மாவட்ட  பங்குபற்றுலுடன் கூடிய நிலையான கரையோர வலய மீளமைப்பு மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய முகாமைத்துவ திட்டம் ,கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்கள அனுசனையில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதே செயலக ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் வி . தவராஜா தலைமையில்  ஆரோக்கியமான சமுத்திரம் ஆரோக்கியமான கோள் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு டச்பார் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று 08.06.2016 மேற்கொள்ளப்பட்டது .  

நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் உலக சமுத்திர தினமாக நாம் இன்று நினைவு கூறுகின்றோம்.

ஆனால் இந்த சமுத்திரத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பவர்கள் நாங்கள் . அதனை பயன்படுத்தி அதனுடைய முழுமையான நன்மையை பெறுகின்ற நாங்கள் அதன் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டிருக்கின்றோம் .    

இந்த வளம் யாரோக்கு சொந்த  என கேற்கும் போது  இது கடல்வள திணைக்களத்திற்கும் ,கரையோர வளங்கள் திணைக்களத்திற்கும் ,அரசாங்கத்திற்கும் சொந்தமானது எனவே இதனை பாதுகாப்பது  இந்த திணைக்களங்களுக்கு தான் பொறுப்பு என  நினைகின்றார்கள் .

அது ஒரு தவறான கருத்து , சமுத்திரம் மக்களுக்கானது இதனை பயன்படுத்துகின்றோம் ,பயனடைகின்றோம் ஆனால் பாதுகாப்பதற்கு இன்னொருவரை நாடுகின்றோம் .

இந்த மனோநிலை மாறினால் இந்த சமுத்திரத்தின் ஆரோக்கியத்தை நாம் பேணமுடியும் .

இந்த சமுத்திரத்தை அண்டிய பகுதியில் வாழ்கின்ற மக்கள் அவர்களது சமுத்திர பகுதியை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கின்றது .

இதனை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்பதற்காக தான் இத்தகைய விழிப்புணர்வுகள் நடத்தப்படுகின்றது .

எனவே நாம் இந்த சமுத்திரத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துக்கொண்டார்

உலக சமுத்திர  தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான சமுத்திரம் ஆரோக்கியமான கோள் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மட்டக்களப்பு டச்பார் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் பணியில்  மட்டக்களப்பு மாவட்ட கரையோர  பாதுகாப்பு  திட்ட  இணைப்பாளர்  எ . கோகுலதீபன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி மலர்விழி பாஸ்கரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிகுற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்