உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணவர்களின் சிரமதான பணிகள் ( VIDEO & PHOTOS )

(லியோன்)

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக மே 30ஆம் திகதி தொடக்கம் ஜூன் 05ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் சுற்றாடல் சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன

இதன் கீழ்   மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட    கல்லடி வேலூர்  ஸ்ரீ சக்தி  வித்தியாலய மாணவர்களினால்   “வணசீவராசி வளங்கள் , சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு எதிரா எழுவோம்”  எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை சுத்தம் செய்யும்   சிரமதான பணிகள் வித்தியாலய அதிபர் எ  .ராசு தலைமையில் இன்று  முன்னெடுக்கப்பட்டன . 

இதன் போது மாணவர்களினால் கல்லடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் மற்றும் ஆலய  வளாகத்தினை துப்பரவு   செய்யும் சிரமதான பணிகள் இடம்பெற்றன  

இந்த சிரமதான பணி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சுற்றாடல் அதிகாரி திருமதி ஆர் .பாஸ்கரன் ,பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என  பலர் கலந்து சிரமதான பணிகளை மேற்கொண்டனர் .