உலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது .( VIDEO & PHOTOS )

(லியோன்)

உலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக .உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார் .

உலக சுற்றாடல் தினத்தை முன்னெடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக மே 30ஆம் திகதி தொடக்கம் ஜூன் 05ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ்   மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம் . உதயகுமார் தலைமையில் மாபெரும் சிரமதான பணி மட்டக்களப்பு டச்பார் கடக்கரை பகுதியில் 02.06.2016 வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது . i

இதன் போது சிரமதான பணியில் சுமார் 60 மேற்பட்ட மாநகர சபை உத்தியோகத்தர்களும்  , ஊழியர்களும்  இணைந்து  சுற்றாடலை பாதுக்காக்கும் சுத்திகரிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டனர்  

இதன் போது கடற்கரை பகுதியல் சேகரிக்கப்பட்ட பெருமளவான பிளாஸ்டி போத்தல்கள் மற்றும் கழிவுகள்  தரம் பிரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்கு உட்படுத்த படவுள்ளது என  ஆணையாளர். தெரிவித்தார் .

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடலை பாதுகாக்கும்  சிரமதான பணி  நிகழ்வில்  மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி  .எஸ் .எம் .சார்ள்ஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலார் வி . தவராசா ,மாவட்ட செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி .ஆர் . பாஸ்கரன் , உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,மற்றும் மாநகர சபை பொதுசுகாதார பரிசோதகர்கள் , மாநகர  சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சுற்றாடலை பாதுகாக்கும் சம்பந்தமாக மிக  ஆணித்தரமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் .

அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கொழும்பு மற்றும் அதனை அன்றிய பிரதேசங்களில் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டன .

இதற்கு காரணம் கால்வாய்கள் கடலோடு சேர்கின்ற இடங்கள் , அந்த சுற்றாடல்  பகுதிகள் அனைத்துமே இந்த பிளாஸ்டிக் கழிவுகளினால் இந்த நகரங்கள் மிக பாதிப்புகுள்ளனது .
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே மிக குறிப்பாக மாநகர சபை  மற்றும் பிரதேச சபை   பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மிக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினால் வெல்ல அனர்த்தத்தில் இருந்து ஓரளவு மட்டக்களப்பு மாவட்டம் பாதுகாப்பான நிலையில் இருந்தது .

இது மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கால்வாய்கள் பல வெல்ல அனர்த்த நடவடிக்கையிலே மிக அக்கறையுடன் செயல்பட்டமையும்  இதற்கு ஒரு காரணம் . இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்றியுடையவர்களா இருக்கின்றார்கள் .

இந்த சுற்றாடல் தினத்தில் இந்த கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள  பிளாஸ்டிக் கழிவுகள் எம்மை மிக வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது .

சர்வதேச தரப்படுத்தலில் இலங்கையை பொறுத்த வகையில்  மிக கவலைக்குரிய விடயமாகும் .ஏன் என்றால் உலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது . அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப கட்டமாக  பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப் படவிருக்கின்றது .

அதில் ஒரு திட்டமாக வாவிகளை சுற்றி எல்லைகளை எல்லையிடுவது , அதேபோன்று கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பது .போன்ற நடவடிக்கைகளை பல முறை கலந்துரையாடப்பட்டுள்ளது .

அதில் மிக முக்கியமாக மாநகர சபை தனது நடவடிக்கைகளை செம்மையாக , சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றது .

அந்தவகையில் சர்வ தேச தரப்படுத்தலில் இலங்கையிலே சுத்தமான நகரமாக மட்டக்களப்பு நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் விசேட விதமாக நன்றிகளை தெரிவிக்க வேண்டும் . இங்கு அரசாங்க அதிபராக வந்ததன் பின்னர் மாநகர சபையை பொறுப்பேற்ற மாநகர ஆணையாளர் இந்த நகரத்தை செம்மையாக பேணி வருகின்றார் .  


சுற்றுலா பயணிகள் ,வெளிநாட்டு  பிரதிநிதிகள் , உலக வங்கி பிரதிநிகள் அனைவரும் மட்டக்களப்பு நரம் மிக அழகான நகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் .

 அளவுக்கு நகர தோற்றம் மிக அழகாக இருப்பதாக தெரியவருகின்றது ..ஆனாலும் இன்னும்  பல விடயங்கள் செய்யவேண்டிய நிலை அதிகமாக இருக்கின்றது .

அவற்றை செய்வதற்கான திட்டமிடல் மாநகர சபையால் வர்த்த மாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது .

அந்த படிவங்களை  உலக வங்கிக்கு தேசிய திட்டமிடல் அமைப்புக்கும் உத்தியோக பூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

இதேபோன்று சில விடயங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இந்த விடயம்  எந்தளவுக்கு வெற்றியளிக்கும்  என்பதை விட , இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .


இதேபோன்று   முன்னெடுக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு பணிகள் மாநகர சபையோடு மட்டும் நின்றுவிடாமல் ஏனைய பிரதேச சபைகளும் முன் உதாரணமாக கொண்டு இவ்வாறான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் .