யாழ் இந்துகல்லுரியின் பழைய மாணவர்களின் அனுசரணையில் கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு (VIDEO & PHOTOS)

 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம்  மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில் க .பொ .த . சாதாரண தரம் கணித பாட  மாணவர்களுக்கான  “இந்து விழி “ எனும் தலைப்பிலான கணித பாட இலகு செயலேடு வழங்கும் நிகழ்வு 29.06.2016 புதன்கிழமை  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில்  இடம்பெற்றது .


யாழ் இந்துகல்லுரியின் பழைய மாணவர்களின்   அனுசரணையில் 2016 ஆம் ஆண்டு கல்வி பொது தரம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தமிழ் மொழி மூல    மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  


மட்டக்களப்பு பாடசாலை  மாணவர்களின் கணித பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் “ரேஸ் போ  எடிவுகேஷன் “ ( கல்விக்கான ஓட்டம் ) திட்டத்தின் கீழ் இக்கையேட்டினை  இலவசமாக வழங்கி வருகின்றனர்  .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி (அலுவலகம் ) திருமதி . கங்கேஸ்வரன் , கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் . வலயக்கல்வி பணிப்பாளர்கள் ,    வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் கணித பாட  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .