மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகிடையிலான வலயமட்ட விளையாட்டு விழா ( VIDEO & PHOTOS )

(லியோன்)

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகிடையிலான   வலயமட்ட விளையாட்டு விழா நிகழ்வுகள் 02.06.2016  இன்று இடம்பெற்றது .

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 65 படசாலைக்கிடையிலான  2016 ஆம் ஆண்டுக்கான இறுதி வலயமட்ட விளையாட்டு விழா நிகழ்வுகள் 02.06.2016 இன்று பிற்பகல் 02.00 மணியளவில் மட்டக்களப்பு கண்ணன்குடா மகா வித்தியாலய மைதானத்தில் மேற்கு கல்வி வலய பணிப்பாளர் கே .சத்தியநாதன் இடம்பெற்றது .

இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான இறுதி வலயமட்ட விளையாட்டு விழா நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அதனை தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .  


இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினரா மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீ நேசன் , விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன், வவுணதீவு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் .இளங்கோவன், மண்டபத்தடி பிரதேச வைத்தியசாலை வைத்திய நிபுணர் கே . முரளிதரன் , கண்ணன்குடா மகா வித்தியாலய அதிபர்  டி .புலேந்திரகுமார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .