மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை பகுதியில் யானை தாக்கி ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்

(லியோன்)

மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவில்  கற்பகக்கேணி கிராம பகுதியில்  நேற்று மாலை காட்டுயானை தாக்கியதன் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவில்  கற்பகக்கேணி கிராம பகுதியல்  நேற்று மாலை குளிக்க செல்லும் வேளையில் காட்டுபகுதியில் இருந்து வந்த யானை ராஜதுரை ( வயது 55) என்பவரையும் அவரது மகள் ராஜதுரை லோஜினி  ( வயது 6) சிறுமியையும் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இந்த சம்பவத்தின் போது சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் தந்தை காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .

உயிரிழந்த சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் . 

 யானை தாக்கி காயங்களுக்குள்ளான சிறுமியின் தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .