மலேரியா நோய் ஒழிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு (VIDEO & PHOTOS )

(லியோன்)

மலேரியா நோய் ஒழிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு  31.05.2016 சனிக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது
.மட்டக்களப்பு பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் மலேரியா நோய் ஒழிப்பு  தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு 31.05.2016 சனிக்கிழமை  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி என் . கிரேஸ் தலைமையில் பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது . 

இங்கு உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி என் . கிரேஸ் தெரிவிக்கையில் இலங்கையில்  1911 ஆம் ஆண்டு முதல் மலேரியா நோய் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழிப்பு நடவடிக்கைகளின் பின் 1911 ஆம் ஆண்டு மலேரியா தடுப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

 1911 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  நோய் ஒழிப்பு  நடவடிக்கையில் 1934  ஆம் தொடக்கம் 1935 ஆண்டு காலப்பகுதியில் எழுமாதங்களில் சுமார் 80 ஆயிரம் பேர் மலேரியா நோயினால் இறந்துள்ளதாகவும் , அதற்கு பின்னர் முப்பது வருட யுத்த காலபகுதியில் 70 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன .      

2014  ஆம் ஆண்டு காலப்பகுதியில்   இந்த நோய்  வெளிநாட்டில் இருந்து  வரும் நபர்கள் மூலம் இந்நோய் இலங்கையில் அதிகளவு பரவிவுள்ளதாக  இனம் காணப்பட்ட போதிலும் 2015 முதல் 2016 வரையான காலப்பகுதியில்   மலேரியா நோய் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக  வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . 
2016ஆம் ஆண்டு மலேரியா நோய் இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்கப்பட்டு இதற்கான மருத்துவ சான்றிதழ்  உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்படவுள்ளது .

எனவே தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு  இந்நோயிக்கு உடனடி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள நவீன வசதிகள் இருப்பதாக  பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் தெரிவித்தார் .

இதுதொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் ஊடக விழிப்புணர்வு  செயலமர்வும் ஊடகவியலாளர்களுக்கான சிகிச்சை முறையிலான பயிற்சிகளும் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு வைத்தியர் திருமதி ஆர் .மேகலா , பிராந்திய பொதுசுகாதார உத்தியோகத்தர்  டி . கஜேந்திரா , மலேரியா தடைப்பிரிவு வெளிக்கள உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .