மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு ஆர்பாட்டம் 01.06.2016   இன்று மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்கா அருகில்  இடம்பெற்றது .
சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட  கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தின் போது இலங்கையில் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது .

இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 06சிங்கள ஊடகவியலாளர்களும் 03 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் .

இந்தநிலையில்  இலங்கையில் நடைபெற்று வந்த கடந்த கால ஆட்சியை ஊடகத்துறையின் பெரும் பங்குடன் முடுவுக்கு கொண்டுவந்த நல்லாட்சி அரசாங்கம்  இன்று இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலை குறித்து விசாரணைகளையே ஆரம்பித்துள்ளது ..

ஆனால் இந்த நாட்டில் பெருந் தொகையாக கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்று வரை ஆரம்பிக்கவில்லை .
இந்த நிலையில் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட  வேண்டும் என கோரி  ககவனயீர்ப்பு  ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது .

இதன் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு மஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கவனயீர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டிஹாரச்சி  மாவட்ட செயலக  ஊடாக அதிகாரி ஜீவனந்தன் ஆகியோருக்கும்    மகஜர்கள் கையளிக்கப்பட்டது .


இடம்பெற்ற இந்த  கவனயீர்ப்பு  ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்  .