மட்டு - சமுதாய சீர்திருத்த திணைக்கள காரியாலய வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வு


(லியோன் )

உலக சுற்றாடல் தினத்தை முன்னெடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக  ஜூன் 05ஆம் திகதி   சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இதன் கீழ் சூழலை பாதுகாக்கும் நோக்குடன்  மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த திணைக்கள காரியாலய  வளாக பகுதியில் மரம் நடுகையும் இயற்கை தோட்டத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு  06.06.2016 திங்கள்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு  நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராசா தலைமையில்  இடம்பெற்றது.

இயற்கை சூழலையும் ,எதிர்கால சந்ததிகளையும்  பாதுகாக்க முகமாக உலக சுற்றாடல் தின நிகழ்வை வழிநடாத்திய  மட்டக்களப்பு  நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த திணைக்கள காரியாலய  உத்தியோகத்தர்கள் மரம் நடுகை நிகழ்வில் கலந்துகொண்டனர்.