கிழக்கு மாகாண நிலக்கடலை அறுவடை விழாவும் இயந்திர பாவனை அறிமுகமும்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சும் கிழக்கு விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த நிலக்கடலை அறுவடை விழாவும் இயந்திர பாவனை அறிமும் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாவடியோடை புத்தம்புரி பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றபோது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பளர் இரா.கோகுலதாஸன் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நெற்செய்கை அதிகளவினைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் உப உணவு பயிர்ச்செய்கையினை மேம்படுத்தும் வகையில் இந்த நிலக்கடலை செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் 3000 ஏக்கரில் நிலக்கடலை செய்கைபண்ணப்படுவதாகவும் சிறுபோகத்தில் சிறுபார் 800 ஏக்கரில் நிலக்கடலை செய்கைபண்ணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பளர் இரா.கோகுலதாஸன் தெரிவித்தார்.

விவசாயிகள் சிறந்த இலாபம் ஈட்டும் தொழில் துறையாக நிலக்கடலை உற்பத்தி இடம்பெற்றுவருவதகாவும் அவர் தெரிவித்தார்.