மட்டு - நகர் கீரிமடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும் ( VIDEO & PHOTOS)

(லியோன் )

மட்டக்களப்பு முகத்துவாரம் வீதி கீரிமடு அருள்மிகு  ஸ்ரீ   சித்தி விநாயகர்  ஆலயத்தின் கும்பாபிசேக  தினத்தை  முன்னிட்டு  பாற்குட பவனியும் சங்காபிசேகமும் ( 08.06.2016) இன்று இடம்பெற்றது .

 மட்டு நகரில் சிறப்பு மிக்க ஆலயமான  கீரிமடு அருள்மிகு  ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலய  மகா கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு   பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும் ஆலய பிரதம குரு விநாயகதாசர் ஆதீன தர்மகர்த்தாவும் ஆலய பிரதம  குருமான சிவஸ்ரீ செ. த.ஜெகநாத சிவாச்சாரியார் தலைமையில் இன்று( 08.06.2016) சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை  மட்டக்களப்பு கோட்டமுனை புன்னையம்பதி ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து   பால் குடபவனி  ஆரம்பமானது

பால்குட பவனியானது ஆலயத்தினை  வந்தடைந்ததும்  அடியார்கள் கொண்டுவந்த  பால் மூலமூர்த்தியாகிய   விநாயகருக்கு   அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட யாக பூஜையும் 1008 சங்காபிஷேக விசேட பூஜைகளும்   கும்பாபிஷேக தின சங்காபிஷேக  பிரதிஷ்ட குரு கோவில்குளம்  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவாகமஜோதி கிரியாபூசணம் ஈசான சிவாச்சாரியார்  சிவஸ்ரீ செ.கு .உதயகுமார் குருக்கள்   தலைமையில்  நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய  விநாயகருக்கு   அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவ பெருவிழாவில்  பெருமளவான பக்த அடியார்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்