மட்டு-கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13.06.2016 ஆரம்பம்

(லியோன்)

மட்டக்களப்பு  கல்லடி முகத்துவாரம்  ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய வருடாந்த அலங்கார சடங்கு உற்சவம் 13ஆம் திகதி திங்கள்கிழமை திருக்கதவு  திறத்தல்  வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
  மட்டு நகரில் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு  கல்லடி முகத்துவாரம்  ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய வருடாந்த அலங்கார சடங்கு உற்சவம் 13ஆம் திகதி திங்கள்கிழமை காலை  திருக்கதவு  திறத்தல்   உற்சவத்துடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 20.06.2016 ஆம் திகதி  திங்கள்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்  இனிதே  நிறைவுபெறும் .

ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் இரவு அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலய பிரதம பூசகர் க.சித்திரவேல் தலைமையில் இடம்பெறும் .

ஆலய உற்சவத்தின் 06ஆம்  நாள் சடங்கு 18.06.2016 சனிக்கிழமை  இரவு தீ மூட்டும் வைபவமும் 19.06.2016  அதிகாலை நான்கு மணிக்கு தீ மிதிப்பு வைபவமும் இடம்பெறும்

 19.06 .2016  ஞாயிற்றுகிழமை 07ஆம்  நாள் சடங்கு நண்பகல் கண்ணிமாருக்குப் பள்ளயப் பூசையும் இரவு விநாயகப் பானை எழுந்தருளப்பன்னுதல் இடம்பெறும்.    

20.06.2016  திங்கள்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ,தீர்த்த உற்சவம் இடம்பெற்று திருக்கும்பம் சொரிதலுடன் கல்லடி முகத்துவாரம்  ஸ்ரீ முத்துமாரியம்மன்    ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே  நிறைவுபெறும் .