மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்கள் வெளியீட்டு நிகழ்வு ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்கள்  வெளியீட்டு நிகழ்வு  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 28.05.2016   இடம்பெற்றது .

 மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையுடன்  யாவரும் பேசலாம் பௌர்ணமி நிகழ்வு – 20 வது  தொடரும்,  சிறுகதைகள் , கவிதை    நூல் வெளியீட்டு நிகழ்வும்  முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் கலாபூசணம் எஸ் . எதிர்மன்னசிங்கம் தலைமையில்  28.05.2016  மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில்  வடகோவை வரதராஜனின் – நிலவு குளிர்ச்சியாக இல்லை -சிறுகதை ,

கருணாகரனின் – படுவான்கரை - கவிதை,

கற்பகம் யசோதரனின் - நீர்தார் பாடல் - கவிதை ,

நோயல் நடேசனின் – வாழும் சுவடுகள் - சிறுகதை ,

கோமகனின் – தனிக் கதை - சிறுகதை ஆகிய நூல்கள்  வெளியீட்டு வைக்கப்பட்டது . 


நூல் வெளியீட்டை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலண்டினா பிரான்சிஸ்னால் நூல் ஆய்வுரை  இடம்பெற்றது

இதனை தொடர்ந்து  ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்பட  ஐந்து  நூல்களின் விற்பனைகள் இடம்பெற்றதுடன், இதன் முதல் பிரதிகளை மட்டக்களப்பு மாநகர சபை உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் பெற்றுக்கொண்டார் . 


மட்டக்களப்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை  நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி , கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை நவரட்ணம் (நவாஜி) மட்டக்களப்பு மாநகர சபை உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் ஆகியோர் அதிதிகளாகவும்  மற்றும் பெருமளவான கலைஞர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .