அம்கோர் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அரச உத்தியோத்தர்களுடனான கலந்துரையாடல்

(லியோ )


அம்கோர் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு  தெளிவூட்டும் கலந்துரையாடல் அம்கோர் நிறுவன தலைமை அதிகாரி பி .முரளிதரன் வழிகாட்டலின் கீழ்  நிறுவன  திட்டமுகாமையாளர் எஸ் .சக்திஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு அம்கோர் நிறுவனத்தில் இன்று இடம்பெற்றது .


அம்கோர் எனும் தேசிய அரச சார்பற்ற நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .

அந்த வகையில் அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் (RESUME) திட்டம் தொடர்பாக  சம்பந்தப்பட்ட  பிரதேச செயலக பிரிவுகளில் சேவையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான கலந்துரையாடலும் விளக்கமளிக்கும் கூட்டம்  அம்கோர் நிறுவனத்தின்   மட்டக்களப்பு காரியாலத்தில் இன்று இடம்பெற்றது .

இதில்  வாழைச்சேனை, செங்கலடி ,களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள  07 கிராமங்களில் கடமையாற்றுகின்ற  17 அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .

மேலும்  மகளிர் சுயஉதவி குழுக்களை அமைத்து அவற்றை வலுபடுத்தல் தொடர்பான ஒரு எண்ணக்கருவை அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் விடயமும் உள்ளக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில்  அம்கோர் நிறுவன தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில், திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு அம்கோர் நிறுவனமும் அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தினை வலியுறுத்தினார் .  

இன்றைய நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் இவ்வாறான நிகழ்வு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை நடாத்துவது சிறந்தது எனவும் பங்கு பற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர் .