செங்கலடி வைத்தியசாலையில் விடுதிநோயாளிகள் அனுபவிக்கும் நுளம்புகடியும் பிரதேசசபையின் பாராமுகமும்

செங்கலடி வைத்தியசாலையின் வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்காக சுற்றியுள்ள காணிகளில் காணப்படும்காடுகளினால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவருவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இந்தகாணி உரிமையாளர்கள் பணக்காரர்கள்.இவர்கள் இந்தகாணியை துப்புரவுபண்ணுவதும் இல்லை இந்த வைத்தியசாலையை சுற்றி காணப்படுவர்களும் வசதியானவர்களும் இவர்களும் இதில்தான் கழிவுகளை எறிந்துசெல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நாய்,பூனைக்குட்டிகளையும் பசளைவேக்கில் போட்டுக்கொண்டு இந்த இடத்தில்தான் எறிந்துசெல்கின்றனர்.கிட்டத்தட்ட பெரிய கழிவுத்தொட்டியாக வைத்தியசாலையை சுற்றியுள்ளோர் பாவித்துவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

செங்கலடிவைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து வேறுநோயிற்காக சிகிச்சை பெறும் நோயாளிகள் நுளம்புக்கடியால் டெங்குநோயையும் பெறும் நிலையேற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

நகரத்தில் அமைந்த வைத்தியசாலை சுற்றியுள்ளவர்களின் இப்படியான செயற்பாடுகளை ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உரியமுறையில் அணுகி கடுகளை அகற்றி செங்கலடிவைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் ஏழை நோயாளர்களை நுளம்புகடியிலிருந்து பாதுகாக்கும்படி நோயாளர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை பலதடவை உரிய தரப்பினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் கூறி இதுவரை எதுவிதநடவடிக்கை எடுக்கப்படவில்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.