மாணவன் இளங்கோ எழுதிய “ அரோகரா “ கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு


(லியோ)

மட்டக்களப்பு கல்லடி  சுவாமி விபுலானந்தா அழகியற்கள் நிறுவக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “ அரோகரா “  கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு  11.05.2016  பிற்பகல் நிறுவகத்தில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்லடி  சுவாமி விபுலானந்தா அழகியற்கள் நிறுவக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர் ஒன்றிய தலைவர் பு . சுரேந்திரன் தலைமையில்  சுவாமி விபுலானந்தா அழகியற்கள் நிறுவகத்தின்  மாணவன் இளங்கோ எழுதிய “ அரோகரா “  கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு  11.05.2016  பிற்பகல் கல்லடி  சுவாமி விபுலானந்தா அழகியற்கள் நிறுவக இராசதுரை அரங்கில் இடம்பெற்றது . 

இந்நிகழ்வில் நிறுவக பணிப்பாளர் கே . ஜெய்சங்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  நிருவாக பணிப்பாளர் இங்கு உரையாற்றுகையில்  எங்களுடைய மாணவர்களின் உள்ளத்தில் உள்ளுறைத்திருக்கும் ஆற்றல்களை வெளிபடுத்துவதாக இந்த நூல் வெளியீடு அமைந்திருக்கின்றது .

ஒரு கவிதை நூலை வெளியிடுகின்ற பொழுது அதனை வழமைபோல் வெளியிடாமல் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து கலை வளங்களை ஒன்றிணைத்து இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவை ஒழுங்கு படுத்தி இருப்பது மிகவும் முக்கியமான ஒரு செய்தியாகும் .

இத்தகைய சிந்தனை தரமும் ,படைப்பாற்றலும் ,முகாமைதத்துவ வல்லமை கொண்ட மாணவ சமூகத்தை உருவாக்குவதே உயர் கல்வி நிறுவனங்களின் நோக்கமாகும் .

பல்கலைக்கழகம் என்பது மாணவர்களுக்கு கற்று கொடுகின்ற இடம் அல்ல இங்கு அறிவு ,அனுபவம் ,ஆற்றல்  என்ற விடயங்கள் பகிர்ந்து கொள்கின்ற இடமாகும் .

கவிதை பாரம்பரியம் என்பது மிக நீண்டது. சமூகம் சார்ந்த செயல்பாடுகளை நேரடியாக முன் நின்று எங்களுடைய மாணவர்கள்  கவிஞ்ஞர்களாக ,ஓவியர்களாக ,நாடககாரர்களாக ,   இசை கலைஞ்ஞர்களாக, நடன கலைஞ்ஞர்களாக பல்வேறு துறைகளில் செயல்பாட்டார்களாக மாறுவது மிக முக்கியமானது .

நாங்கள் எல்லா விடயங்களையும் பேசி விட்டோம் ஆனால் நாங்கள் பேச வேண்டிய மிக்கியமான விடயத்தை நாங்கள் கடுமையான மௌனத்தில் இருக்கின்றோம் .

அது தான் இன்று இலங்கையில் எல்லா பல்கலைக்கழகங்களில் நடந்து கொண்டிருக்கின்ற பகிடி வதை . இது மிக பெரிய வன்முறையாகும் .

இந்த வன்முறையை நாங்கள் பண்பாடாக வைத்துக்கொண்டு வெளியில் நிகழ்த்தும் வன்முறைகளை குனக்கெடுப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள கூடியது என்று நாங்கள் சிந்திக்க வேண்டும் .

நாங்கள் யாரை விரடுகின்றோம் , யாரை தாக்குகின்றோம் , இவற்றை எல்லாம் வைத்திருக்கின்ற நாங்கள் இந்த பகிடி வதையை எப்படி பண்பாடாக ஏற்றுக்கொள்ள முடியும் .

இவ்வகையிலான  வன்முறைகளையும் நாங்கள் எங்களில் இருந்து நீக்குவதற்கு கற்றுக்கொள்ளவதற்கான  முக்கிய ஊடகமாக இந்த கலை காணப்படுகின்றது .

கவிதை என்பது கலை வலிமையும், வல்லமையும் , அநீதிகளை கண்டு பொங்கி குரல் கொடுகின்ற கலையாக   அமைய வேண்டும் என தனது விசேட உரையின் போது தெரிவித்துக்கொண்டார் .


சுவாமி விபுலானந்தா அழகியற்கள் நிறுவக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற “ அரோகரா “  கவிதைத் தொகுப்பு வெளியீடு விழா நிகழ்வில் நிருவாக விரிவுரையாளர்கள் ,பேராசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் , மாணவர்களை கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .