(லியோ)
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் நிதி
ஒதுக்கீட்டின் கீழ் ஐந்து மில்லியன் ரூபா செலவில்
மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையம் இன்று
வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.
துரைராசசிங்கம் . கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர்
கே. கருணாகரன், சமூக சேவைகள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என். மணிவண்ணன் ,
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி
.தவராஜா , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் . அருள்மொழி மற்றும் மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர்கள் ,முதியோர் சங்க
உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்டிட திறப்பு விழா நிகழ்வினை தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக
டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதியோர் சங்கங்களுக்கு சக்கரக்கதிரைகளும் , முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கான பாவனைப் பொருட்கள் மற்றும் வறுமைக் கோட்டின்
கீழ் வாழும் விதைவைகளுக்கான வாழ்வாதார நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.