கிழக்குமாகாண பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகத்தின் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்


(லியோ)

கிழக்குமாகாண பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகத்தின்  கணக்கீடு மற்றும் எதிர்கால செயல்திட்டம்  தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமைக்காரியாலய கணக்கீடு ,2016 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம் தொடர்பான முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான  கலந்துரையாடல் தவிசாளரும் ,கிழக்கு மாகாண பாலர்பாடசாலைகள் கல்விப்பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது .

இந்த கலந்துரையாடலானது பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின்  செயல்பாடுகளை எதிர்காலத்திலே எவ்வாறு பலப்படுத்தலாம்  என்பதை ஆராயப்படும் நோக்குடன் 2016 ஆம் ஆண்டில் பல செயல்திட்டங்களை செயல்படுத்துவதற்கு     யுனிசெப் நிறுவனம்  , பிளான் ஸ்ரீலங்கா நிறுவனம் , மாகாணசபை , மத்திய அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இது தொடர்பான அனுமதிகளும் கிடைக்கப்பட்டுள்ளதுடன், கிழக்குமாகாணத்தை பொருத்தமட்டில் 1832 பாலர்பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அதில் 4065 ஆசிரியர்கள் உள்ளடக்கியதாக 3537 ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது .

மிகுதியாக உள்ள ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கும்  மாதாந்த கொடுப்பனவுகளை  வழங்கப்படும் என இடம்பெற்ற    கலந்துரையாடலின் போது கிழக்குமாகாண பாலர்பாடசாலைகள் கல்விப்பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது .


கிழக்குமாகாண பாலர்பாடசாலைகள் கல்விப்பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில்   திருகோணமலை மாவட்ட காரியாலய பாலர்பாடசாலை கல்விப்பணியக செயலாற்று பணிப்பாளர்  எஸ் . வரதசீலன் , அம்பாறை மாவட்ட காரியாலய பாலர்பாடசாலை கல்விப்பணியக செயலாற்று பணிப்பாளர்  கே .எம் . சுபைர்  மற்றும் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை , மாவட்ட காரியாலய முகாமைத்துவ உதவியாளர்கள் , வெளிக்க்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .