எதிர் வரும் 15ஆம் திகதிக்கும் முன் கிடைக்கப்படவுள்ள அறிக்கையினை பொறுத்து வாகரைப்பிரதேசத்தில் உயிரின கைத்தொழில் வலயம் முன்னெடுக்கப்படும்

(லியோ )

எதிர் வரும் 15ஆம் திகதிக்கும் முன் கிடைக்கப்படவுள்ள அறிக்கையினை பொறுத்து மட்டக்களப்பு  மாவட்டத்தின் வாகரைப்பிரதேசத்தில்  உயிரின கைத்தொழில் வலயம் முன்னெடுக்கப்படும் . இதில்  முரண்பாடுகள்  ஏற்படுமாயின் இந்த  வேலைத்திட்டம் வடமாகாணத்திற்கு கொண்டு செல்லப்படும் என நீரியல் மீன்பிடி துறை அமைச்சர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் தேசிய நீர் உயிரின கைத்தொழில் வலயம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் பி .எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் கலந்துகொண்ட  நீரியல் மீன்பிடி துறை அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில்  2100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில்  நீர் உயிரின கைத்தொழில் வலயம் அமைப்பதற்காக  கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனூடாக 5000 பேருக்கு  வேலைவாயிப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன்  இப்பகுதி மக்களின் முன்னேற்றகரமான பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  செயப்படவுள்ளது .  

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள், மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட மீனவ சங்க உறுப்பினர்கள் , வாகரை பிரதேச பொதுமக்கள் , மீனவ சங்க உறுப்பினர்கள் ,பிரதேச செயலாளர் ஆகியோருடன்  கலந்துரையாடுவதற்கான கூட்டம்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிகழ்வில் கலந்துகொண்டோறினால் வாகரைப் பிரதேசத்தில்  நீர் உயிரின கைத்தொழில் வலயம் அமைப்பது தொடர்பாக பல முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது .

உயிரின கைத்தொழில் வலயம் வாகரைப் பிரதேசத்தில்  அமைப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள்  வாகரை பிரதேச மக்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்கு அமைய  எதிர் காலத்தில் இந்த திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்  . 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  பூரண அறிக்கை ஒன்றை எதிர் வரும் 15ஆம் திகதிக்கும் முன் அமைச்சின் செயலாளருக்கு  சமர்பிக்குமாறும், கிடைக்கப்படவுள்ள அறிக்கையினை பொறுத்து மட்டக்களப்பு  மாவட்டத்தின் வாகரைப்பிரதேசத்தில்  இந்த நீர் உயிரின கைத்தொழில் வலயம் முன்னெடுக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டது .


இந்த நீர் உயிரின கைத்தொழில் வலயம் அமைப்பதில் முரண்பாடுகள்  ஏற்படுமாயின் இந்த பாரிய வேலைத்திட்டம்  வடமாகாணத்திற்கு கொண்டு செல்லப்படும் அங்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என நீரியல் மீன்பிடி துறை அமைச்சர் தெரிவித்தார் .

இந்நிகழ்வில் நீரியல் மீன்பிடி துறை அமைச்சர் மகிந்த அமரவீர , அமைச்சின் செயலாளர் ,  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  ஞா. சிறிநேசன் ,கிழக்கு  மாகாண விவசாய அமைச்சர் துரைராஜா சிங்கம் ,   கிழக்கு  மாகாணசபை உறுப்பினர்கள்  இரா . துறைரெத்தினம் , கோவிந்தன் கருணாகரன் , எ. டி . முகமட்  ஷிப்லிபாருக்,  ஞா . கிருஷ்ணபிள்ளை , எம் . நடராஜா ,  கிழக்கு மாகாண சபை தவிசாளரும் , கிழக்கு மாகாண உறுப்பினருமான  இந்திரகுமார் பிரசன்னா  மற்றும்  அரச திணைக்கள அதிகாரிகள்,  பிரதேச செயலக அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர் ,  பிரதேச மீனவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.