அமிர்தகழி இளைஞர் கழகத்தினால் நடத்தப்பட்ட சித்திரை புதுவருட கலை ,கலாசார விளையாட்டு நிகழ்வுகள்


(லியோ)

சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு  அமிர்தகழி இளைஞர்  கழகத்தினால் நடத்தப்பட்ட  சித்திரை  புதுவருட  கலை ,கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   மட்டக்களப்பு - அமிர்தகழி   கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை  இடம்பெற்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவை பிரிவின் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தமிழ் சிங்கள  சித்திரை புதுவருட பாரம்பரிய கலை , கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்   நேற்று மாலை  மட்டக்களப்பு  அமிர்தகழி    கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை  மிக சிறப்பாக   இடம்பெற்றது .

இடம்பெற்ற சித்திரை புதுவருட கலை ,கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய  கலாசார விளையாட்டு நிகழ்வாக  ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , வலுக்கு மரம் ஏறுதல் ,  தேசிக்காய் கரண்டி ஓட்டம்  என சிறுவர்கள்  மற்றும் பெரியவர்களுக்கான பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு  அமிர்தகழி கிராம பொதுமக்கள்  ,பாடசாலை  சிறுவர்கள் என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் . உதயகுமார் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எச் .கே .டி .ஹெட்டிஹாரச்சி , அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி எஸ் . தர்ஷினி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . வனஜா ,மண்முனை  வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி .பி . பிரசாந்தினி  மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி . அருள்மொழி , அமிர்தகழி கிராம அபிவிருத்தி குழு தலைவர் மருதலிங்கம் மற்றும் அமிர்தகழி இளைஞர்  கழக உறுப்பினர்கள் , அமிர்தகழி கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் .