ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் கணித பழம் ஆன்மீக நூலினை அறிமுக படுத்தும் நிகழ்வு

(லியோ)

ஸ்ரீமத் பாகவதம்  வேத ஞானத்தின் கணித பழம் என்ற அழைக்கப்படுகின்ற ஸ்ரீமத் பாகவதம்  இலக்கிய ஆன்மீக நூலினை  அரச உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தும்  நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .


அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இலங்கை முழுவதும்  ஆன்மீக முன்னேற்றத்திற்காக ஸ்ரீமத் பாகவதம்  என்ற சர்வ வேதாந்த சாரத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது .

இதன் கீழ்  மட்டக்களப்பு கல்லடி கிருஷ்ண பக்தி இயக்கமானது  மட்டக்களப்பில்  உள்ள அரசாங்க அலுவலகம் மற்றும் பாடசாலை கல்லூரியில் பணியாற்று, அரச ஊழியர்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்திற்காக ஸ்ரீமத் பாகவதம்  என்ற சர்வ வேதாந்த சாரத்தை அறிமுகம் படுத்தும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது .

இந்த ஆன்மீக நூலினை  அறிமுகப்படுத்தும்  நிகழ்வில் ஐரோப்பிய கிருஷ்ண பக்தி பிரம்மச்சாரிகளான   வாசுதேவதத்த தாஸ் ,லோமாஞ்சத தாஸ் , சுதர்சன சக்ச தாஷ் மற்றும் மட்டக்களப்பு அரச அலுவலகம் ,பாடசாலைகள் மற்றும் கல்லூரியில் பணியாற்றும் அரச  உத்தியோகத்தர் கலந்துகொண்டனர் .

இந்த நூல் உலகில் முதன் முறையாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு  ஸ்ரீமத் பாகவதம்  வேத ஞானத்தின் கணித பழம் என்று அழைக்கப்படுகின்ற இந்த ஸ்ரீமத் பாகவதம்,  இலக்கிய நூல்களில் உண்மையான ஆத்மாவின் ஜனனதர்மத்தை விவரிக்கின்ற வேத நூலாக அமைகின்றது என இந்த நூல் தொடர்பாக அறிமுக படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட கிருஷ்ண பக்தி பிரம்மச்சாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.