கடும் உஷ்ண கால நிலைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு

(லியோ)


தமிழ் சிங்கள புதுவருடத்தினை குதுகலமாக கொண்டாடும் வகையில் தமிழ் சிங்கள மக்கள் தயாராகி வருகின்றனர் .


கிழக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் மிகுந்த மகிழ்சியுடன் வர்த்தக நிலையங்களை நோக்கிச் செல்வதை காணமுடிகின்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் சித்திரைப் புதுவருடத்திற்கான  பொருள் கொள்வனவுக்காக மட்டக்களப்பு நகரை நோக்கி வந்து செல்வதை காணமுடிகின்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் உஷ்ணம் நிலவும் நிலையிலும் பெருமளவானோர் மட்டக்களப்பு நகருக்கு வருவதை காணமுடிகின்றது .

பொது மக்கள் சிறந்த முறையில் அச்சம் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் வகையில் விசேட பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

நல்லாட்சியின் கீழ் வறுமையில் வாழ்கின்ற மக்களும் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சித்திரைப் புதுவருடத்தினை வரவேற்க தயாராகி வருகின்றனர்.