எங்களுடைய பாரம்பரிய கலைகள் ,பண்பாடுகள் , கலாசார விழுமியங்கள் என்பன இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றது

(லியோ)

முத்தமிழ் கலாசார விழாவும் தேனகம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் முத்தமிழ் கலாசார விழாவும் தேனகம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான வி .தவராஜா  தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ், சிறப்பு அதிதியாக பேராசிரியர் . சி . மௌனகுரு  கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக   கட்புல தொழில்நுட்ப கலைத்துறை இணைப்பாளர்  சு . சிவரேத்தினம்திருமதி . கத்தரீன் வயலற் சந்திரசேகரம் ,பெரியதம்பி வினாசித்தம்பி ஜெயராஜா , துவான் ஆரிப் சராவூடீன் ,சிதம்பரப்பிள்ளை நவராசா ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் உரையாற்றிய மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான வி .தவராஜா  தெரிவிக்கையில் கலாசார நிகழ்வுளையும் விழாக்களையும் நடத்துவதற்கு பல்வேறு தேவைப்பாடுகள் இருக்கின்றது .

எங்களுடைய பாரம்பரிய கலைகள் ,பண்பாடுகள் , கலாசார விளும்பியங்கள் என்பன  இப்போது கேள்விக்குறியாக இருக்கின்ற வேளையிலே இந்த பிரதேச செயலகங்கள் அவற்றை மீட்டெடுத்து இளம் சந்ததியினருக்கு கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது .

 தற்போது வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமிப்பில் நுழைந்து தங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் . இப்போது எம்மிடம் கிராமிய பாடல்கள் இல்லை , கிராமிய நடனங்கள் இல்லை , கிராமிய கதைகள் இல்லை .

இவற்றையெல்லாம் யார் தேடுவது என்ற கேள்வி எழுகின்ற போதுதான் ஒரு பிரதேச செயலத்திற்கும் கலாசார பேரவைக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றதை நாங்கள் உணர்துள்ளோம் .

எனவே இவற்றைமீட்டெடுக்க  வேண்டும் என்ற நோக்குடன்  மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை இந்த முத்தமிழ் கலாசார விழாவையும்  தேனகம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வையும் நடத்துகின்றது என தெரிவித்தார் /

இன்று இடம்பெறுகின்ற  கலாசார பேரவை நிகழ்வில் மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதோடு , பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற  தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவையின் அங்கத்தவர்கள் , மண்முன வடக்கு பிரதேச செயலக பிரிவு அலுவலக உத்தியோகத்தர்கள் ,  பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு பாலமீன்மடு பாடசாலை , வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை  மற்றும் திசவீரசிங்கம் சதுக்கம் பரதகலாலயா ஆகிய மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .