வெபர் கிண்ணத்தினை கைப்பற்றியது ஏறாவூர் இளந்தாரகை அணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட ஜேசுசபை துறவி அருட்தந்தை வெபர் அடிகளாரின் நினைவாக மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுவரும் வெபர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி)அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மைக்கல்மென் விளையாட்டுக்கழகத்தின் பூரண அனுசனையுடன் நடாத்தப்பட்ட இந்த உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 12 பதிவுசெய்யப்பட்ட கழகங்கள் பங்குகொண்டன.

நோக்கவுட் முறையில் நடாத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற் மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

மைக்கல்மென் அணியும் ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி)அணியும் இந்த இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன.இதன்போது மிகவும் விறுவி;றுப்பாக நடைபெற்ற போட்டியில் 1-0என்ற ரீதியில் ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி)அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இறுப்போட்டி பரிசளிப்பு நிகழ்வில் ஜேசுசபை துறவியும் புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவருமாக அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருமான மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரண்டு இளம் வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் தொடரின் சிறந்த வீரராக ஏறாவூர் இளந்தாரகை அணி வீரர் அன்சார் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கேடயங்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.