மண்மணைப்பற்று பிரதேசத்தின் 2016 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம்

(லியோ)

மண்மணைப்பற்று பிரதேசத்தின்   2016 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான முதலாவது அபிவிருத்தி  குழு கூட்டம் மண்மணைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  29.04.2016  வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

 
மட்டக்களப்பு மண்முணைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக  2016ம் ஆண்டுக்கான முதலாவது உயர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்   பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் 29.04.2016 வெள்ளிக்கிழமை   பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி  ந. சத்தியானந்தியின்  ஒழுங்கமைப்பில்   இடம் பெற்றது. 

மண்முணைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 27 கிராம சேவகர் பிரிவில் ஒரு கிராமத்திற்கு 10 இலட்சம் விகிதம் 27 கிராமத்திற்கும் 27 மில்லியன் கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் ,பண்முகப்படுத்தப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பெருமதிமிக்க மொத்த அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

இதேபோன்று  கடந்த வருடத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும்  மீளாய்வு செய்யப்பட்டதுடன் , மாவட்ட வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும்,  பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை குறைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  ஞா. சிறிநேசன் ,கிழக்கு  மாகாண விவசாய அமைச்சர் துரைராஜா சிங்கம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் , இரா.துறைரெட்ணம் , கிழக்கு மாகாண சபை தவிசாளரும் , கிழக்கு மாகாண உறுப்பினருமான  இந்திரகுமார் பிரசன்னா  மற்றும் பிரதேச  திணைக்கள அதிகாரிகள்,  பிரதேச செயலக அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர் , பிரதேச அபிவிருத்தி குழு உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர். 











 .