மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு

பிறந்திருக்கும் துர்முகி தமிழ் சிங்கள புத்தாண்டினை நாடெங்கிலும் உள்ள தமிழ் சிங்க மக்கள் பல்வேறு பண்பாட்டுகலாசார நிகழ்வுகள் மூலம் கொண்டாடிவருகின்றனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் 2.36 மணி சுபவேளையில் புண்ணியா காலம் ஆரம்பமானதை தொடர்ந்து இந்துக்கள் மருத்துநீர் தேய்த்து புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனையொட்டி இன்று காலை முதல் ஆலயங்களில் மருத்து நீர் வழங்கும் பணிகள் சிறப்பான முறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை தொடக்கம் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

அத்துடன் சித்திரைப்புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பிற்பகல் தொடக்கம் விசேட பூஜைகளும் ஆலயத்தில் நடைபெற்றுவருவதுடன் மாலை புத்தாண்டு விசேட பூஜைகளும் நடைபெறவுள்ள.