2016 மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணத்தை நிலஅளவை திணைக்கள அணி சுவிகரித்துக்கொண்டது.


(லியோ)


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணம்    2016 மென்பந்து  கிரிகெட் சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில் நிலஅளவை திணைக்கள அணி   03  ஓட்டங்களால் வெற்றி  பெற்று 2016 மாவட்ட அரசாங்க அதிபர்   சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலக அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட   24  அணிகளுக்கிடையிலான  அரசாங்க அதிபர் 2016  சவால் கிண்ண  பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து  கிரிகெட் சுற்றுபோட்டிகள்  கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு  நாட்களாக மட்டக்களப்பு  பாட்டாளிபுரம் விளையாட்டு  மைதானத்தில் இடம்பெற்றது .

கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக  இடம்பெற்ற பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து   கிரிகெட் சுற்றுபோட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான  மட்டக்களப்பு மாவட்ட நிலஅளவை திணைக்கள அணியும்  மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலக அணிக்கும் இடையில் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை   இடம்பெற்ற இறுதி போட்டியில் மோதிகொண்டன .

 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம்பெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆரையம்பதி  பிரதேச செயலக அணி களத்தடுப்பில் ஈடுபட்டது .

முதலில் துடுப்பெடுத்தாடிய மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி  பத்து ஓவர்கள் முடிவில்  69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய    ஆரையம்பதி  பிரதேச செயலக அணி பத்து ஓவர்கள் முடிவில்  66  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

 நடைப்பெற்று  முடிந்த  2016 மாவட்ட அரசாங்க அதிபர்   சவால் கிண்ண இறுதி போட்டியில் மூன்றாம் இடத்தினை இணைப்பு வெற்றி அணிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியும் , நீதிமன்ற அணியினரும் பெற்றுக்கொண்டனர் .

இரண்டாம் இடத்தினை ஆரையம்பதி பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது .

2016 அரசாங்க அதிபர்  சவால் கிண்ண   மென்பந்து கிரிகெட் சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில்  மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி மூன்று ஓட்டங்களால் வெற்றி பெற்று  2016 மாவட்ட அரசாங்க அதிபர்   சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது

இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர்  எஸ் . ரங்கநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ் . நேசராசா , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா . ஆரையம்பதி பிரதேச செயலாளர்  திருமதி என் .சத்தியானந்தி , உதவி பிரதேச செயலாளர் திருமதி .எல் .பிரசாந்தன் மற்றும் மாவட்டத்தின் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .