நிலைமாற்று நீதிக்கான செய்முறைகளில் மக்களின் பங்களிப்பை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

(லியோ)

இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்புக்களுடன் கரித்தாஸ் எகெட் நிறுவகம் இணைந்து நிலைமாற்று நீதிக்கான செய்முறைகளில் மக்களின் பங்களிப்பை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு இடம்பெற்றது .


இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்புக்களுடன் கரித்தாஸ் எகெட் நிறுவகம் இணைந்து நிலைமாற்று நீதிக்கான செய்முறைகளில் மக்களின் பங்களிப்பை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கரித்தாஸ் எகெட்  நிறுவன  பணிப்பாளர்  அருட்தந்தை  ஜிறோம் டி  லிமா  தலைமையில் இன்று காலை 09.00  மணி முதல்  மாலை 03.00   மணி வரை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது . 

இலங்கை நீதிக்கான செய்முறைகளில் மக்களின் பங்களிப்பை மேம்படுத்தம் நோக்குடன் மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் . கிராம மட்ட மக்கள் ஆகியோருடன் இருந்து  தகவல்களைக் திரட்டி மீறப்பட்ட மனித உரிமைகளால்  இடம்பெற்ற காணாமல் போனோர் ,மறுக்கப்பட்ட அவர்களுக்கான நீதி மறுசீரமைப்பு , நட்டஈடு  வழங்குதல் போன்ற செயல்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு பரிந்துரைக்க மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன்  இந்த செயலமர்வு  இடம்பெற்றது .



இந்நிகழ்வில்  மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சர்வமத தலைவர்களான  சிவ ஸ்ரீ  வே .சி . சிவபாலன் குருக்கள் ,  ஜமியத் உலாமா தலைவர் மௌலவி  அப்துல் காதர் ,அம்பாறை  வணக்கத்துக்குரிய  ரங் முத்துகல ரங்க ரத்ன தேரர்   அம்பாறை  எ .எம் .எம் . ராம்ஸி  மற்றும் மட்டக்களப்பு – அம்பாறை  சர்வமத அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ,  அரச ஆர்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மட்டக்களப்பு – அம்பாறை  சிவில் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் , ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்