கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 7ஆம் திகதி

கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் - இலங்கையினால் கிறிஸ்தவ மாணவர் மத்தியில் வேதாகம அறிவை வளர்க்கும் நோக்கில் வருடா வருடம் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது.


இலங்கையின் பல பாகத்திலும் கிறிஸ்தவ மாணவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம், அம்பறை மாவட்டத்தில் பரவலாக பல பாடசாலைகளில் இப்பரீட்சை நடாத்தப்படுகின்றது.

திருகோணமலை, யாழ்ப்பாணம், முருங்கன், கொழும்பு, பலாங்கொட ஆகிய பிரதேசப் பாடசாலைகளிலும் பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஏறக்குறைய 8000 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். 2016ல் இன்னும் பல புதிய பிரதேசங்கள் உள்வாங்கப்பட்வுள்ளன. பரிசளிப்பு விழா நிகழ்வுகள் வைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

முதலாவது பரிசளிப்பு விழா, முதலாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி உயர் புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்த மாணவர்களுக்கு எதிர்வரும் 07.03.2016 (திங்கட் கிழமை) காலை 9.30 மணிக்கு மட்டு-மகாஜன கல்லூரி மண்டபத்தில் வைப்பதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ் குறிப்பிடப்படும் வகுப்புக்களில் உச்ச புள்ளிகள் பெற்ற மாணவர்கள்  இந் நிகழ்விற்கு அழைக்கப்பட்டு பதக்கம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
வகுப்புக்கள்
பரிசு பெறும் மாணவர்களின் புள்ளி விபரம்
தரம் 4,5,6,7,8
88 புள்ளிகளும் அதற்கு மேல் பெற்றவர்களும்
தரம் 9
90 புள்ளிகளும் அதற்கு மேல் பெற்றவர்களும்
தரம் 10
88 புள்ளிகளும் அதற்கு மேல் பெற்றவர்களும்
தரம் 11
60 புள்ளிகளும் அதற்கு மேல் பெற்றவர்களும்
தரம் 12, 13
40 புள்ளிகளும் அதற்கு மேல் பெற்றவர்களும்

மேற்குறிப்பிட்ட புள்ளிகளுக்கு கீழ் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் வெகுவிரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இப்பரிசளிபப்பு விழாவில் தேவசெய்தி, கலை நிகழ்வுகள் என்பன இடம் பெறவுள்ளன. இவ் விழா “கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் - இலங்கை” யின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.யு.ஆ.நு.போல் அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ளது. “கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் - மட்டக்களப்பு” கிளையினரும் இணைந்து நிகழ்வுகளை நடாத்துகின்றார்கள்.

.போல்
முகாமைத்துவப் பணிப்பாளர்
கல்வி சார் கிறிஸ்தவ ஐக்கியம் - இலங்கை