மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜகோபுரம் தாங்கிய அம்மன் ஆலயமாகவுள்ள மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

புத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை,சுவாமி உள்வீதி,வெளிவீதியுலா என்பன நடைபெற்றுவந்தது.

இன்று காலை விசேட வழிபாடுகளுடன் தம்ப பூஜை நடைபெற்ற வசந்த மண்டபத்தில் விநாயகர்,சிவன்பார்வதி,வள்ளிதெய்வானை சமேதராக முருகப்பெருமான், மாரியம்மன்,மகாவிஸ்ணு ஆகிய தெய்வங்கள் எழுந்தருளச்செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆதனைத்தொடர்ந்து ஐந்து தெய்வங்களும் உள்வீதி வலம் வந்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து அடியார்கள் வடமிழுக்க பஞ்சர உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடி சந்தியை அடைந்து அதன் ஊடாக மீண்டும் ஆலயத்தினை பஞ்சரதங்கள் வந்தடைந்தன.இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.