மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் சாதனை

(இ.சுதா)

அண்மையில் வெளியான கல்விப் பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்ட பிரதேச பாடசாலையான மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் சு.நிதுசிகா 9ஏ தரச் சித்தியினையும், மோ.திலஷ்சன் 6ஏ 3பி, ம.தர்சனா 6ஏ 2பி எஸ், அ.கவித்தா 5ஏ 2பி சி எஸ் சித்தியினையும் பெற்றுள்ளதுடன் இப் பாடசாலையில் 37 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 28 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் சித்தி பாடசாலை ஒப்பீட்டளவில் 86வீதமாகும்.இப் பாடசாலை மாணவர்கள் பிரதான பாடங்களான கணிதம் இதமிழ்ஆங்கிலம் இவிஞ்ஞானம் போன்ற பாடங்களில் அதிகளவான சித்தி பெற்று வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் சித்திரம் இசுகாதாரம் போன்ற பாடத்துறைகளில் நூறு வீதமான சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகல வசதிகளுடனும் இயங்கிவரும் நகர்புற பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப் பாடசாலையின் வளர்ச்சியானது அண்மைக் காலமாக  விளையாட்டில் மாத்திரமல்லாது கல்வியிலும் மேலோங்கிக் காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.