மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை தரமுள்ளவர்களாக மாற்றுவதற்காக முன்பள்ளி டிப்ளோமா பாடநெறி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவகம் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ள ஆசிரியர்களுக்கான முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியை முதன்முறையாக ஆரம்பித்துவைத்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விபுலானந்தா மண்டபத்தில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் டி.குணரெட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் விரிவுரையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போமு முதல் கட்ட பயிற்சிக்காக 90 முன்பள்ளி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.