பெண்கள் கல்வியிலும் , தொழில் துறையிலும் , அரசியலிலும் , நிர்வாக துறையிலும் தடம்பதித்து வருகின்றார்கள் .

(லியோ)

இன்று பெண்கள் கல்வியிலும் , தொழில் துறையிலும் , அரசியலிலும் , நிர்வாக துறையிலும் தடம்பதித்து வருகின்றார்கள் . சர்வதேச மகளிர் தின நிகழ்வில்  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்  தெரிவித்தார் .


மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியும் ,காவியா பெண்கள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  சிறந்த பெண் நிர்வாகிகளாக சேவையாற்றுகின்ற பெண்கள் கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு  மாவட்டத்தின் சிறந்த பெண் நிர்வாகியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .சார்ள்ஸ் உட்பட கல்விக்கான சிறந்த பெண் நிர்வாகிகளாக  பாடசாலை அதிபர்கள் , பிரதேச செயலகத்தின் சிறந்த பெண் நிர்வாகிகளாக பிரதேச செயலாளர்கள் , கல்வி விரிவுரையின்  சிறந்த பெண் நிர்வாகிகளாக விரிவுரையாளர்கள் ,பொது அமைப்புகளின் சிறந்த பெண் நிர்வாகிகளாக  அமைப்புக்களின் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டார் .


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தெரிவிக்கையில்   ஆண் ஆதிக்கம் என்று  சொல்லப்பட்ட  காலத்தில் பெண்கள் சமூகத்திலே இரண்டாம் தரமாக கணிக்கப்பட்டார்கள் .

அந்த கருத்தியல் காரணமாக  அன்று பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் . அப்போது ஆண் ஆதிக்கம் நிலவியது . அப்போது பாலின பாகுபாடு பார்த்தார்கள் , பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரிக்கப்பட்டன ,பெண்கள் குழந்தைகள் வேண்டாம் என்ற ஒரு நிலை வந்தது , அதன் விளைவாக அன்று கருகலப்புகள் அதிகமாக செய்யப்பட்டன . பெண் சிசுக்கள் சிசுவிலே  கொள்ளப்பட்டன .

இந்நிலை மாறி இந்த 21ஆம் நுற்றாண்டில் இதில் இருந்து விடுபட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்ற வேளையில் பெண்ணியலாளர்கள் ,சமூக ஆள்வளர்கள் அதிக விடமுயற்சியின் பயனாக பெண்களுக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டு பெண் விடுதலைக்காக போராடினார்கள் .
அதன் விளைவாக இன்று பெண்கள் சமூகத்தில் முக்கியத்தும் பெறுகின்றார்கள் . இன்று பெண்கள் கல்வியிலும் , தொழில் துறையிலும் , அரசியலிலும் , நிர்வாக துறையிலும் தடம்பதித்து வருகின்றார்கள் . இவ்வாறான பெண்கள் இன்று  சமூக மட்டத்திலும் சமூக சேவைகளிலும் சிறந்த முறையில் சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றனர் . இவ்வாறு சிறந்த முறையில் சேவையாற்றி சிறந்த பெண் நிர்வாகிகளாக கௌரவிக்கப்படுகின்றமை சிறந்த விடயமாகும் .

இவ்வாறான நிகழ்வுகள் சர்வதேச பெண்கள் தினத்தில் மட்டும் நடைமுறை படுத்தாமல் தொடர்ந்து பெண்கள் கௌரவிக்கப்பட வேண்டும் .


அன்றைய நிலை மாறி பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கின்ற நிலை வரவேண்டும் என   இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் தெரிவித்தார் .