வவுணதீவு மண்முனை மேற்குபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்

(லியோ )

மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனை மேற்கு  வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பாக  2016 ஆம் ஆண்டுக்கான முதல் கலந்துரையாடல்   மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . பி .எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது .

இந்த ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு  வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்   மேற்கொள்ளப்படவிருகின்ற  சிறுபோகம் பயிர்ச்செய்கை ,நெல் கொள்வனவு , விவசாயிகளுக்கான வங்கி கடன் திட்டம் , விவசாயத்துக்கான நீர்பாசன திட்டம் , பயிர்ச்செய்கையின் போது பயிர்களுக்கான நோய் தடுப்பு , உரமானியம்  தொடர்பாகவும்   மட்டக்களப்பு மாவட்ட சகல அரசியல்  கட்சிகளையும் ,அரச அதிகாரிகளையும்   இணைத்துக்கொண்டதாக  வேலைத்திட்டங்களை நடைமுறை படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது விவசாயிகள்  தமது கோரிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபருக்கு முன்வைத்தனர் .

தங்களது விவசாயத்தை மேற்கொள்ள  போதிய நீர் வசதிகள் இல்லை இதற்கான வேலைத்திட்டங்களையும்  , தங்களுக்கு மானிய முறையிலான கிடைக்கப்படவேண்டிய  உரம் கிடைப்பதற்கான திட்டங்களையும்  அரச வங்கிகளூடாக  வழங்கப்படும் விவசாய   கடன் வசதிகளையும்  அத்துடன் தமது விளைச்சல் நெல்லினை  அரசினால் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பல கோரிக்கைகளை இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டன .

இதன் போது இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அரச வங்கிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்  விவசாயிகளிடம் இருந்து  7 வீதம் வட்டி தான் விவசாயிகளிடம் இருந்து அறவிடப்படுகின்றது , எட்டு வீதமான வட்டியினை  அரசாங்கம் மத்திய வங்கி ஊடாக குறிக்கப்பட்ட வங்கிகளுக்கு விவசாய கடன்களுக்காக செலுத்தி கொண்டிருக்கிறது .

எனவே இந்த அனுகூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் நோக்கம் . ஜனாதிபதியினால்  தேசிய உணவு உற்பத்தி திட்டத்தினை பிரகடன படுத்தப்பட்டுள்ளது  .

இதற்காக  மாதாந்தம் மீள்ளாய்வு கூட்டம் ஜனாதிபதி செயலகத்திலே நடந்துகொண்டிருக்கிறது , இந்த வேலைத்திட்டத்தில் வங்கியாளர்கள் முக்கியமான  பங்குதாரர்களாக இருக்கின்றார்கள்.

 எனவே இந்த விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிற்பதற்கும்  வங்கியாளர்கள் விவசாயிகளுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் , அதனை விடுத்து  இந்த திட்டத்தில் வங்கியாளர்கள் வர்த்தக நிறுவனமாக செயல்படமுடியாது .

 தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் முக்கிய பங்காளிகளாக வங்கியாளர்கள் தான் செயல்பட வேண்டும் , எனவே விவசாயிகள் இந்த கடன்களை எப்படி பெற்றுக்கொள்வது எவ்வாறு உணவு உற்பத்திக்கு சாதகமாக பயன்படுத்துவது அதே நேரம் உரிய நேரத்தில் இந்த கடன்களை மீள செலுத்துவது போன்ற விடயங்களை விவசாயிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும் . இல்லை எனில் விவசாயிகள் பணதரகர்கள் மூலம் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக  கூடுதலான வட்டிக்கு கடனை பெற்றுக்கொன்று அதனை மீள செலுத்த முடியாமல் பல்வேறு பட்ட சிக்கல்களுக்கு உட்படுத்தபடுகின்றார்கள் .

 எனவே அரசால் அறிமுக படுத்தப்பட்ட பயனான திட்டமானது விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் .

 இந்த விவசாய திட்டத்தின் ஊடாக வங்கிகளுக்கு கிடைக்கப்படுகின்ற  பணம் வேறு ஒரு செயல்பாடுகளுக்கு அளிக்கப்படுகின்றது ,இது ஒரு வேதனையான விடயம் எனவே வங்கிகள் இந்த விடயத்தில் மனிதாபிமான முறையில் செயல்பட்டு இந்த விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  கலந்துகொண்ட வங்கியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் .


இன்று இடம்பெற்ற  மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான  கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ் . சுதாகர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஆர் . கோகுலதாசன்,  மட்டக்களப்பு மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான ஞா , ஸ்ரீநேசன் , மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் .வியாலேந்திரன் , எஸ் .யோகேஸ்வரன் ,  . மற்றும்  , கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர்  பிரசன்னா இந்திரகுமார் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  இரா .துரைரட்ணம்  மற்றும் மாவட்ட விவசாய அபிவிருத்தி ககுழு உறுப்பினர்கள் , மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாயிகள்  கலந்துகொண்டனர் .