மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா

இந்துக்களின் புனித நாளான சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்கள் மற்றும் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

சிவனுக்கு உமைஅம்மைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் நாளை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.