கா.பொ.த.சாதாரண தர முடிவுகளின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் சித்தி –பின்தங்கிய பகுதி மாணவகள் சாதனை

வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தர முடிவுகளின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆண்கள் பாடசாலையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் 20 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றுள்ளதுடன் 26க்கும் மேற்பட்ட மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரிpயில் 14 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றுள்ளதுடன் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் 02 மாணவிகள்; 9 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றுள்ளதுடன் கல்லடி விபுலானந்தா வித்தியாலகத்தில் ஒரு மாணவியும் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் ரபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் முதல் தடவையாக ஒரு மாணவர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளது.

இதேவேளை பட்டிருப்பு கல்வி வலயத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் இணையத்தள முடிவுகளின் அடிப்படையில் அதிகளவான மாணவர்கள் சித்திpயடைந்துள்ளதாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரியில்; 05பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் மிகவும் பின்தங்கிய பகுதியான மண்டூர் 13ஆம் கொலணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஒரு மாணவர் ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.