அமிர்தகழி கிராமிய சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா

(லியோ)

மட்டக்களப்பு  அமிர்தகழி கிராமிய சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் பத்தாவது ஆண்டு  நிறைவு விழா இன்று இடம்பெற்றது .


 மட்டக்களப்பு அமிர்தகழி கிராம சேவை பிரிவில் இயங்கி வரும் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு  விழா சங்கத்தின் தலைவர் ஒய்வு நிலை அதிபர் .க . இளையதம்பி தலைமையில் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராஜா, சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களான   .ப . கலாதேவன் , எஸ் . ஜெயசேகர் , கிராம சேவை உத்தியோகத்தர்  எஸ் . பிரியதர்சினி , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலய அதிபர் . என் . தர்மசீலன் ,  மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்கலான எம் . அரசரெத்தினம் , க . நற்குணசிங்கம் , அமிர்தகழி கிராம அபிவிருத்தி சங்க தலைவர்  எம் . மருதலிங்கம் மற்றும் அமிர்தகழி கிராம சிரேஸ்ட பிரஜைகளின் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வின் போது சிரேஸ்ட பிரஜைகளினால் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் . இதனை தொடர்ந்து இங்கு  உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்  சிரேஸ்ட பிரஜைகள் இந்த சமுதாயத்தின் பொக்கிசங்களாகவும் ,வணகத்துக்குரியவர்களாகவும் , மதிக்கப்படவேண்டியவர்களாகவும் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மனநிலை மாறுமாக இருந்தால் அந்த சமுதாயம் மதிக்கத்தக்க சமுதாயமாக உருவாகும் .


இந்நிலையினை  இளம் சமூக மத்தியிலும்  இந்த  சமுதாயத்திலும்  முதியவர்கள் மதிக்க படுபவர்களாக வழிநடத்த  இளம் வயதினரை உருவாக்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டார் .