மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களின் மாபெரும் இரத்ததான முகாம்

 (லியோ)

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து  மாபெரும் இரத்ததான  முகாம் இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து  “  உதிரம் தந்து உயிர் கொடுப்போம்,  உயிர் கொடுக்கும் தோழரே உயிர் என்றால் உயிர் வேண்டாம் உதிரம் போதும் நண்பரே எனும் தொனியில்  மாபெரும் இரத்ததான முகாம்  கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் இன்று    காலை 09.00 மணியளவில்    கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக இராசதுரை மண்டபத்தில்  இடம்பெற்றது .

போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்கீழ் இன்று காலை 09.00 மணி முதல்  பிற்பகல்  04.30 மணி வரை  இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது .



இளைஞர் யுவதிகள்  சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்  மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இரத்ததான  முகாமில் 124  மாணவர்கள் தனது உதிரத்தை தானமாக வழங்கினார்கள்.


இன்று இடம்பெற்ற இரத்ததான  முகாமில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  மாணவியர்கள் 77   பேர் தமது உதிரத்தை தானமாக வழங்கி இருந்தார்கள்.

இந்நிகழ்வானது  மட்டக்களப்பில் முதல் முறையாக அதிகளவு பெண்கள் ஒரே நாளில்  தமது உதிரத்தை  தானமாக வழங்கப்பட்ட  தினமாக  இன்றிய நாளை குறிப்பிடலாம்

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் .கே .விவேக் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள்  கலந்துகொண்டனர்.