மட்டு - புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு

  (லியோ)


மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது . 


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழா  நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உரையாற்றுகையில் நாங்கள் குழந்தைகளின் மனநிலைக்கு மாறாவிட்டால் இறைவனை அடைய முடியாது .

நாங்கள் குழந்தைகளுக்கு உபதேசம் செய்வதைவிட நாங்கள் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் .

ஒவ்வொரு மாணவனுக்கும் தனி திறமை இருக்கின்றது . அந்த தனி திறமையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களும் முக்கியமான விடயமாகும் .

அதனை கண்டு பிடிக்காமல் அவர்களை பலவந்தமாக ஒரு துறைக்கு அனுப்புவது என்பது அவர்களை கொலை செய்வதற்கு  சமமான விடயமாகும் .

எனவே குழந்தைகளின் மனநிலையினை அறிந்து அவர்களின் கல்வி செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவது  ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் உள்ள பாரிய பொறுப்பாகும் இதனை அறிந்து ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் சரியான முறையில் செயல்பட்டால் அவர்கள் எதிர் பார்த்த இலக்கினை அடைந்து உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என தெரிவித்தார் .


 இன்று இடம்பெற்ற கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த  பரிசளிப்பு விழா நிகழவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா , கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் ( தமிழ் )  டி .யுவராஜா , விசேட அதிதியாக திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்  டி . கமலநாதன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  சிரேஷ்ட வைத்திய நிபுணர்   வைத்தியர் திருமதி . சுரேஷ்ணி ராஜேந்திரம் மற்றும் இவ்விழாவுக்கு  அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்