மட்டு - கல்லடி விநாயகர் வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்

(லியோ )

மட்டக்களப்பு  கல்லடி விநாயகர்  வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு  கல்லடி விநாயகர்  வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  பாடசாலை அதிபர் இ. தியாலிங்கம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

 இவ் விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம  விருந்தினர்களாக  மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசன் ,மற்றும் திருமதி . ஸ்ரீநேசன் , சிறப்பு  விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன், கௌரவ விருந்தினர்களாக மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ .சுகுமார்மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் (ஆரம்பகல்வி) ஆர். பாஸ்கரன் , விசேட விருந்தினர்களாக  கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை தலைவர்  வி .  மோகநாதன் ,  வைத்தியர்  டி . கேதீஸன் ,கல்லடி சாயி கமிட்டி தலைவர் . என் , கனேசானந்தன் மற்றும்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் வலயக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மாணவ தலைவர்களினால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, சத்திய பிரமாண நிகழ்வுடன்  மாணவர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது.

2016 ஆம் ஆண்டு புதிய பாட திட்டத்திற்கு  அமைவாக “செயல்பட்டு மகிழ்வோம் “  என்ற திட்டத்தின் கீழ்  மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் , வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோரின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,

இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.