என்டோ ஞாபகார்த்த சவால் கிண்ண இறுதி போட்டியில் யங் ஈரோஸ் விளையாட்டு கழகம் 12 ஓட்டங்களால் வெற்றி

(லியோ)

மைக்கல் மேன்  விளையாட்டு கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற என்டோ  ஞாபகார்த்த சவால் கிண்ண  கடின பந்து  கிரிகெட் சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில் யங் ஈரோஸ் விளையாட்டு கழகம் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது .


மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிகெட் கட்டுப்பாட்டு சபையில் உள்ள  12 கிரிகெட் கழகங்களுக்கிடையில்  மைக்கல் மேன்  விளையாட்டு கழக ஏற்பாட்டில் கழகத்தின் தலைவர் அருட்தந்தை டி .சகாயநாதன் தலைமையில் இடம்பெற்ற என்டோ  ஞாபகார்த்த சவால் கிண்ண  பத்து ஓவர்கள் கொண்ட கடின பந்து  கிரிகெட் சுற்றுபோட்டிகள்  கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடாசலை மைதானத்தில் இடம்பெற்றது .

கடந்த மூன்று நாட்களாக  இடம்பெற்ற பத்து ஓவர்கள் கொண்ட கடின பந்து  கிரிகெட் சுற்றுபோட்டிகளில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தெரிவான  மட்டக்களப்பு லக்கி விளையாட்டு கழகம் மற்றும் ஏறாவூர் யங் ஈரோஸ் விளையாட்டு கழகமும் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் மோதிகொண்டன .

இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் யங் ஈரோஸ் விளையாட்டு கழகம் பத்து ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  மட்டக்களப்பு லக்கி விளையாட்டு கழகம் பத்து ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

மைக்கல் மேன்  விளையாட்டு கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற என்டோ  ஞாபகார்த்த சவால் கிண்ண  கடின பந்து  கிரிகெட் சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில் யங் ஈரோஸ் விளையாட்டு கழகம் 12 ஓட்டங்களால் என்டோ  ஞாபகார்த்த சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்தந்தை போல் சற்குணநாயகம் ,விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் என் .பி .ரஞ்சன் ,கௌரவ அதிதியாகளாக கிழக்கு விளையாட்டு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் மைக்கல் மேன்  விளையாட்டு கழக போசகருமான அருட்தந்தை நவரெட்ணம் ,  கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்விப் பிரிவு  திருமதி . ஆர் . புவனசிங்கம் ,அமரர் என்டோவின் பெற்றோர்கள் மற்றும் மாகாண கிரிகெட் பயிற்றுவிப்பாளர் மஞ்சுள கருணாரத்ன ,மட்டக்களப்பு மாவட்ட கிரிகெட் பயிற்றுவிப்பாளர்    அன்வர் டீன் , முன்னாள் இலங்கை கிரிகெட் அணி வீரர் நிரோஷன் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர் .