மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு


 (என்டன் )

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய  கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் இன்று தெரிவு  செய்யப்பட்டனர் .


 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய  கல்லூரியின்  பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வும்  சங்கத்தின் தலைவர் எந்திரி .ஜி .பிரகாஷ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .

 இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எந்திரி வை . கோபிநாத் ,உபசெயலாளர் எஸ் . சக்தீஸ்வரன், பொருளாளர் ஆர் . கஜந்தன் , கல்லூரி அதிபர் பி . விமல்ராஜ் , உபதிபர் .ஆர் . பாஸ்கர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் .பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர் .

இன்று இடம்பெற்ற பொதுகூட்டத்தில்  கல்லூரியின் கடந்தகால சங்கத்தின் அபிவிருத்தி செயல்பாடுகள் மற்றும்  பழைய மாணவர்களின் கல்லூரிக்கான  எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . 

இதனை தொடர்ந்து  புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்

இதன்போது புதிய நிர்வாக தலைவராக எஸ் .சசிகரன் , செயலாளராக  எந்திரி  யு . மயூரன், பொருளாளராக ஆர் . கஜாந்தன், உபதலைவர்களாக  வைத்தியர் மௌலீசன் மற்றும் கலைச்செல்வன் , போஷகராக அதிபர் .ஜெ .ஆர் .பி .விமல்ராஜ் இவர்களுடன் 17 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர் .


இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய  கல்லூரியின்  பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்  மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வில்  கல்லூரியின் பழைய மாணவர்கள் , கல்லூரி அதிபர் ,பிரதி அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர் .