போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் திராய்மடு கிராமசேவை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

(லியோ )

“ மைத்திரி ஆட்சி நிலையான நாடு “   போதைப்பொருளிலிருந்து  விடுபட்ட நாடு போதைப்பொருள் ஒழிப்பு  தேசிய வேலைத்திட்டம் 2016   நாடளாவியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .


வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் போதைப்பொருள் ஒழிப்பு  தேசிய வேலைத்திட்டம் நாடளாவியல் ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இதன் ஒரு திட்டம் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றம்  மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக இணைந்து விசேட மாதிரி கிராம  போதைப்பொருள் ஒழிப்பு  வேலைத்திட்டத்தினை  திராய்மடு கிராமசேவை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் மாதிரி  கிராம அபிவிருத்தி திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு  தேசிய வேலைத்திட்டம் 2016    “ போதையற்ற கிராமங்கள் உருவாக்க உறுதிபூணுவோம் “  எனும் தொனிப்பொருளில் ஆரம்ப நிகழ்வு  இன்று திராய்மடு கொலனி கிராம சேவை பிரிவில் இடம்பெற்றது .


இதன் போது போதைப்பொருள்  தொடர்பான விழிப்புணர்வு அறிவூட்டல்களும்  தொடர்ந்து வீடு வீடாக சென்று போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் , ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டது .

இந்நிகழ்வில் அதிதிகளாக  திவிநெகும   திணைக்கள மாவட்ட பணிப்பாளர் பி .குணரட்ணம்,  மாவட்ட செயலக திவிநெகும முகாமையாளர்  எம் . மனோகிதராஜ் , திவிநெகும   திணைக்கள முகாமைத்துவ  பணிப்பாளர்  திருமதி கே . நிர்மளா. ,மண்முனை வடக்கு பிரதேச செயலக   சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் . எஸ்  . விஜெகுமார் ,இருதயபுரம் வங்கி முகாமையாளர் திருமதி .கே .சுவந்தினி , இருதயபுரம் வலய உதவியாளர் .டி .பிரபாகரன் , இருதயபுரம் வலய  வங்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,  வலய  திவிநெகும   உத்தியோகத்தர்  இ .காண்டீபன், கிராம சேவை உத்தியோகத்தர்  எ .நேசதுரை  மற்றும்  திராய்மடு  கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,சமுர்த்தி சங்கங்களில்  பயனாளிகள் மற்றும் கிராம மக்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்,