(லியோ )
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான
பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான
பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை 25ஆம் திகதி குழுவின் தலைவர் நாகலிங்கம் செல்வக்குமார் தலைமையில் மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
இன்று
காலை 09.30 மணியளவில்
ஆரம்பமான அமர்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மாவட்ட மகளிர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கல்விமான்கள் , சமய தலைவர்கள் , முஸ்லிம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைத்தனர்
.
இதன் போது இலங்கை மதசார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும் , இலங்கையில்
அனைவரும் தேசிய இனமாக மாற்றப்பட வேண்டும் , நாட்டின் தேசிய கொடியில் உள்ள
படிமங்கள் ஆக்கிரமைப்பையோ , வன்முறைகளையோ அடையாள படுத்தாக வகையில் தேசிய கொடி அமைய
வேண்டும் , இலங்கை அரசியல் யாப்பில் பெண்களின் அடிப்படை உரிமைகள் தனி பகுதியாக அமைய
வேண்டும் , மலையக மக்களின் நில உரிமைகள்
அரசியல் அமைப்பில் உறுதி படுத்தல் வேண்டும் , அரசியல் யாப்பில் விகிதாசார தேர்தல்
முறையில் இருத்த வேண்டும் என்ற பல
யோசனைகள் பொதுமக்களினால் இன்று இடம்பெற்ற அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்டன .
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான
பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாவது நாள் அமர்வு 26ஆம் திகதி
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச
செயலகத்தில் இடம்பெறவுள்ளது .