மட்டுநகரின் மாபெரும் கிரிக்கெட் சமரில் கோட்டமுனை கழகம் மாபெரும் வெற்றி

மட்டுநகரின் மாபெரும் கிரிக்கெட் சமராகன Battle of Batti யின் ஆரம்ப நிகழ்வாhனது சிவனந்தா விளையாட்டு மைதானத்தில் 20.02.2016 அன்று மிக கோலாகலமாக  ஆரம்பமாகியது.

சுpவானந்த படசாலையின் அருகில் இருந்து வெற்றிக்கின்னத்தை அணித்தலைவர்கள் சுமந்து வர அதன் பின் இரு கழக வீரர்களும் அணிவகுத்து வர, பிரதம விருந்தினர்களும், சிறப்பு விருந்தினர்களும், இரு கழக அங்கத்தவ்களும்; அதனை தொடர்து வந்தனர்.


இந்நிகழ்வுக்கு பிரதமவருந்தினராக சிவானந்தாh தேசிய படசாலையின் அதிபர் திரு.மனோராஜ் அவ்களும் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்;தலைவர் திரு.ரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 
                  

ஓவ்வொரு வருடமும் இருநாள் கொண்ட போட்டியாக நடைபெறும் இச்சமர் இம்முறையும் இரண்டு நாள் கொண்ட போட்டியாhகவும் மூன்றாம் நாள் இரு கழக மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போட்டியாகவும் நடாத்த தீர்மாhனிக்கபட்டது.


இதன் அடிப்படையில் முதல் நாள் ஆட்டம் ஆரம்பிக்கும் நோக்குடன் நாணய சுழற்சியில் இரு அணித்தலைவர்களும் ஈடுபட்டனர். கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு அணித்தலைவராக லஜிகுமார அவ்களும் சிவனந்த விளையாட்டு கழகத்திற்கு அணித்தலைவராக ஜெனிசிஸ் அவர்களும் நாணய சுழற்சியில் ஈடுபட்டனர்.



நூணய சுழற்சியில் வெற்ற்p பெற்ற கோட்டைமுனை விளையாட்டு கழகம் களதடுப்பில் ஈடுபட சம்மதம் தெரிவிக்க சிவானந்தா விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது முதலாவது ஓவரிலேயே ஒரு விக்கெட்டினை இழந்த சிவானந்தா விளையாட்டு கழகம் சற்று மந்த கதியில் துடுப்பெடுத்தட தடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன ஒரு கட்டத்தில் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இக்கழகத்தை அனுபவ வீரரான தவகீசன் தனது திறமையான துடுப்பாட்டம் மூலம் சிவானந்தா விளையாட்டு கழகத்தை 164 ஓட்டங்கள் சேர்கக உதவினர்.


இதில் தவகீசன் 39 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும், பந்து வீச்சில் தேனு 3 விக்கெட்டுக்களையும், டிலக்சன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.  
                   


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டைமுனை விளையாட்டு கழகம் வந்த வேகத்திலேயே தனக்கே உரிய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் வினோதன் இரண்டு நான்னு ஓட்டங்களை பெற்ற வேளையில் இவர் ஆட்டமிழக்க அதன் பின் வந்த வீரர்களும் சொற்க ஓட்டங்களுக்க ஆட்டமிழக்க கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வளர்பழறயாக திகழும் அஸ்லீயுடன் துணை சேர்ந்தார்  தனுசன் இருவரும் மிக நிதானமாக துடுப்பெடுத்தடிக்கொண்டிருந்த போது தனுசன் 38 ஓட்டங்களுக்க ஆட்டமிழக்க அதே வேகத்தில் அஸ்லீ அவர்கள் நிதானமாhக 86 பங்து வீச்சுக்களை சந்தித்து 33 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க சிவானந்தா விளையாட்டு கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் தன் அணிக்காக மிக சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்தார்.




இக்கட்டன நிலையில் கோட்டைமுனை விளையாட்டு கழகம் இருந்த போது ஆனுபவ வீரர்களான ரெட்னராஜ் அவர்களும் யது அவ்களும் நிதானமாhக துடுப்பெடுத்தாடி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு வித்திட்டனர்.




இதில்பிரசாத் அவர்கள் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
     


 8 வருடங்களாக நடைபெறு வரும் இச்சமரில் முதல் நாள் வெற்றியை எப்போதும் சிவானந்தா விளையாட்டு கழகமே வெற்றிக்கனியை சுவைத்து வந்தது இம்முறை முதல் தடவையாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினர் வெ;றிவாகை சூடியுள்ளனர். நூளை மூத்த கழக வீரர்களுக்கான போட்டியும் 22ம் திகதி இரண்டாம் போட்டியும் இடம்பெறும்.
தகவல்
பாலசிங்கம் ஜெயதாசன்
செயலாளர்

கோட்டைமுணை விளையாட்டு கழகம்