கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்

 (என்டன் )


கல்லடி உப்போடை   சிவானந்தா தேசிய பாடசாலையின்   2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது .

 மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  கல்லடி உப்போடை   சிவானந்தா தேசிய பாடசாலையின்   2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  02.30  மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர்  கே .மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது .

விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம   விருந்தினராக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான  அமைச்சர் . மனோகணேசன் கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன்  வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே . பாஸ்கரன் ,வலயக் கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எ .சுகுமாரன் , ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி  உறுப்பினர் எஸ் . கணேசமூர்த்தி மற்றும்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, உதைப்பந்தாட்டம் , வலைப்பந்தாட்டம் ,கராத்தே மற்றும் பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது

விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .