அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வுகள்

(லியோ )

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான  இரண்டாம்  நாள் அமர்வுகள் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்இடம்பெற்றது .



அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான  முதல் நாள் அமர்வுகள் நேற்று  வியாழக்கிழமை 25ஆம் திகதி குழுவின்  தலைவர் நாகலிங்கம் செல்வக்குமார் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது  .

இதன் இரண்டாம்  நாள் அமர்வுகள் இன்று  வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணி வரை இடம்பெற்றது .

இன்று ஆரம்பமான இரண்டாம் நாள் அமர்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கல்விமான்கள் , சமய தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் , மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தமது  யோசனைகளை வைத்தனர்  .

இன்று முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகளில்
இலங்கையில் அனைவரும் தேசிய இனமாக மாற்றப்பட வேண்டும் ,
நாட்டின் தேசிய கொடியில் உள்ள படிமங்கள்  மாற்றப்பட வேண்டும் ,
இலங்கை அரசியல் யாப்பில் விகிதாசார தேர்தல் முறையில் இருத்த வேண்டும். 
கல்வியில் அரசியல் தலையீட்டு இருக்க கூடாது .
பாராளுமன்றத்தில் எந்த மத தலையீடும் இருக்ககூடாது . 
வடக்கு கிழக்கு இணைந்த அதிகார பரவல் கூடிய மாநில சுய ஆட்சி வேண்டும்

மாகாண மாநில அரசியல் அமைப்புக்கள் சுயமாக இயங்க வேண்டும்  என இன்று ஆரம்பமான இரண்டாம் நாள் அமர்வில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன .

இன்று பிற்பகல் இடம்பெற்ற அமர்வில் மட்டக்களப்பு வெருகல் மற்றும் வாகரை பகுதியில் வாழ்கின்ற ஆதிக்குடி வாசிகள் கலந்துகொண்டு தமது மொழி, கலாசாரம், உணவு ,வாழ்வாதாரம் மற்றும் தொழில் போன்ற தனித்துவம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இலங்கைத்தீவில்  வாழும் பூர்வீக குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு தங்களை அரசியலிலும்  மற்றும் அரசியல் யாப்பிலும் இணைத்துக்கொள்ள  வேண்டும் என  யோசனைகளை முன்வைத்தனர் .
.

குறிப்பாக இன்று ஆரம்பமான இரண்டாம் நாள் அமர்வில் பாடசாலை மாணவன் ஒருவனும்  தமது யோசனைகளை  முன்வைக்கையில் ஐதாம் தரம்  புலமைப்பரிசில் பரீட்சை தமது வயதுக்கு பெரும் சுமையாக உள்ளதால் இப்பரீட்சையினை தரம் 09 வைக்கப்பட வேண்டும், வங்கிகள் பாடசாலைகளில் பரிசில்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்  , சிறுவர் துஸ்பிரயோகங்களினால்  சிறுவர்கள்  தமது கல்வியினை தொடர முடியாத  நிலை உள்ளது .  எனவே  அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் இதனையும் இணைத்துக்கொள்ள  கருத்தில் கொள்ளுமாறும் மாணவன் தமது யோசனைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது .